தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

விண்டோஸ் கீபோர்டில் ஏஐ புரட்சி - மைக்ரோசாப்ட் அதிரடி!.

07:13 PM Jan 06, 2024 IST | admin
Advertisement

டெக்னாலஜியில் மாபெரும் புரட்சி ஏற்படுத்தி வரும் ஏஐ, கணினி பயன்பாட்டையும் மாற்றி அமைத்துக் கொண்டே போகிறது. ஆம்.. இந்த பூமி கண்டிராத மாற்றங்கள் கணினி வருகைக்குப் பிறகு இங்கு நிகழத் தொடங்கியது. தற்போது அதற்கு மாற்றாக தொழில்நுட்பத்தில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த சூழலையும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஆரம்பித்து இருக்கிறது ஏஐ தொழில்நுட்பம். இதன் வளர்ச்சி சமூகத்தில் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தாமல் கணினி பயன்பாட்டிலும் மிகப்பெரிய மாற்றாக உருவெடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில் 1994-ல் விண்டோஸ் உபயோகத்துக்கான ஸ்டார்ட் பட்டன் ஒன்றை மைக்ரோசாப்ட் நிறுவனம் கீ போர்டில் கடைசியாக புகுத்தியது. அதன் பின்னர் 30 ஆண்டுகள் இடைவெளியில், அதிகரிக்கும் செயற்கை நுண்ணறிவின் தாக்கத்துக்கு ஈடுகொடுக்கும் வகையிலான ஏஐ பட்டன் ஒன்றை, கீ போர்டில் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகம் செய்கிறது.

Advertisement

அதாவது ஸ்பேஸ் பட்டனின் வலதுபுறம் இந்த ஏஐ பட்டன் இடம்பெற இருக்கிறது. இது சாட்பாட் உட்பட ஏஐ தொடர்பான அனைத்து பயன்பாடுகளுக்கும் திறப்பாக அமையும். இந்த வசதி விண்டோஸ் 11 பதிப்புகளில் கிடைக்கும். மைக்ரோசாப்டின் ஹார்ட்வேர் துணை நிறுவனங்கள் இதற்கான தயாரிப்புகளில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளன. தற்போதைய ஏஐ பட்டனும் மைக்ரோசாப்டின் ’கோபைலட்’ அம்சமாகவே அறிமுகமாக இருக்கிறது.

Advertisement

முன்னதாக கணினி பயன்பாடு வரக்கூடிய காலங்களில் பெரிய மாற்றத்தை காண இருக்கிறது. கணினி பயன்பாட்டை எளிமைப்படுத்த சில ஷார்ட் கட் மெத்தடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இவைகள் கீ போர்டை கொண்டு டைப்பிங் செய்யும் முறையில் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் ஒவ்வொரு விதமான பயன்பாட்டை பெறவும் அதற்கென்று தனியாக வடிவமைக்கப்பட்டிருக்கக்கூடிய அப்ளிகேஷனை பயன்படுத்த வேண்டி இருக்கிறது. இவற்றிற்கு மாற்றாக ஏஐ தொழில்நுட்பம் உருவெடுத்து இருக்கிறது.

ஏஐ தொழில்நுட்பம் வரக்கூடிய காலங்களில் உரையாடல் மூலமாக கணினியை செயல்படுத்த இருக்கிறது. வட்டார மொழிகளில் எளிமையான முறையில் டிவைஸை தங்களது சொற்களால் மனிதர்கள் கட்டுப்படுத்த இருக்கின்றனர். இதன் மூலம் மின்னஞ்சல் அனுப்ப, பல்வேறு வகையான தகவல்களை பகிர, டேட்டா ஸ்டோரேஜ் ஆராய முடியும். இது மட்டுமல்லாமல் இனி தனித் தனி அப்ளிகேஷன்கள் பயன்படுத்தும் நிலை வெகுவாக குறையும். என்று கணினி வல்லுநர்கள் சொல்லி வந்தார்கள்.

அதன்படி ஹார்ட்வேர் மட்டுமன்றி ஏஐ புரட்சி காரணமாக சாஃப்ட்வேரிலும் பெரும் மாற்றங்கள் காணப்பட இருக்கின்றன. அதற்கேற்ப மைக்ரோசாப்ட் பயன்பாட்டாளர்கள் தங்களது கம்ப்யூட்டரை அப்கிரேட் செய்துகொள்வதும் அவசியமாகக் கூடும். புதிதாக கம்ப்யூட்டர் வாங்க விரும்புவோர், இந்த மாற்றங்களை உள்ளடக்கிய புதிய தலைமுறை வருகைக்காக சற்று காத்திருக்கவும் செய்யலாம்.

எற்கெனவே 2024-ம் ஆண்டினை ஏஐ-க்கான ஆண்டாக டெக் உலகம் பாவிக்கிறது. அந்தவகையில் புதிய தலைமுறை கம்ப்யூட்டர்கள் இனி ’ஏஐ பிசி’(AI PC) என்பதாகவே அடையாளம் காணப்படும். கம்ப்யூட்டர் மற்றுமன்றி உள்ளங்கை கம்ப்யூட்டராக மாறிவரும் செல்போனும் அதனது ’ஸ்மார்ட் போன்’ என்ற அடையாளத்திலிருந்து ’ஏஐ போன்’(AI phones) என்பதாக மாற இருக்கிறது. எடையற்றும், செயற்கை நுண்ணறிவின் புதுவித பயன்பாடுகளோடும் இந்த ஏஐ போன்கள் சந்தைக்கு வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது .

Tags :
AIAI Copilot ButtonKeyboards.revolutionTechnoly MicrosoftWindows Keyboard
Advertisement
Next Article