தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

கத்திரி வெயில் காலம் எனப்படும் அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிவிட்டது!

08:09 AM May 04, 2024 IST | admin
Advertisement

ன்று அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் தொடங்கி விட்டது. ஒரு மாதம் நீடிக்கும் இந்த வெயிலின் தாக்கம் 115 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே இக்காலத்தில் கவனமாக இருக்குமாறு ஆந்தை ரிப்போர்ட்டர் டீம் கேட்டுக் கொள்கிறது. இந்த அக்னி நட்சத்திரம், கத்திரி வெயில் என்ற வார்த்தைகளை வானிலை ஆய்வு மையம் பயன்படுத்துவதில்லை. அதே சமயம் சித்திரை முதல் இளவேனில் காலம் தொடங்குவதாக இலக்கண நூல்கள் தெரிவிக்கின்றன. பெயரில் இளவேனில் என்று கொண்டிருந்தாலும் அடிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் தொடங்கிவிட்டால் அவ்வளவுதான். வெப்பமும் வியர்வையும் பெருகிவழியும். குறிப்பாக வெயில்காலத்தில் எந்த நாள்களில் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் வானியல் அறிவினால் கணக்கிட்டு அந்த நாள்களைக் குறித்துக் கொடுத்திருக்கிறார்கள். அப்படி ஜோதிடம் மற்றும் பஞ்சாங்கத்தின்படி, பரணி நட்சத்திரம் தொடங்கி கிருத்திகை நட்சத்திரம் வரை சூரியனின் பயணிக்கும் காலமே அக்னி நட்சத்திரம் என்றும் கத்தரி வெயில் எனவும் அழைக்கப்படுகிறது.

Advertisement

பொதுவாகவே, மே மாதத்தில் வெயில் அதிகமாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் வெப்பநிலை அதிகரிப்பது குறித்து வானிலை ஆய்வு மையம் கண்காணிக்கும். வழக்கம் போல் இந்தாண்டு கோடை காலம் தொடங்கியதிலிருந்தே தமிழகத்தில் பல நகரங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது. மே தொடக்கத்திலேயே அதிகபட்சமாக ஈரோடு, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் 11 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதற்கிடையில், பஞ்சாங்க கணிப்புப்படி பரணி நட்சத்திரத்தில் இருந்து, கிருத்திகை நட்சத்திரம் நோக்கி சூரியன் பயணிக்கும் காலமான அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது.

Advertisement

இந்த நாள்களில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாக இருக்கும். வெப்பம் அதிகரிக்கும்போது இயல்பாகவே மனித சக்தி அதிகமாகச் செலவாகும். எனவே, உடல் உழைப்பை அதிகம் கோரும் சில செயல்களை நம் முன்னோர்கள் இந்த நாள்களில் செய்வதைத் தடை செய்தனர். குறிப்பாகக் கிணறு வெட்டுதல், பூமிபூஜை செய்வது, கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவது, விதை விதைப்பது, மரம் வெட்டுவது, குழந்தைகளுக்குக் காதுகுத்தி மொட்டை போடுவது ஆகியனவற்றைக் கட்டாயம் செய்யக் கூடாது என்று வகுத்துள்ளனர். இவற்றுக்கான ஜோதிட ரீதியிலான காரணங்கள் பல இருந்தாலும் யதார்த்தமான காரணங்களையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

மேலும் அக்னி நட்சத்திர காலகட்டம் என்பது தானம் செய்ய வேண்டிய காலம். குறிப்பாக வறியவர்களுக்கு, உணவு, நீர், உடை ஆகியனவற்றைக் கட்டாயம் தானம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் தானம், மிகுந்த புண்ணிய பலனை ஏற்படுத்தும். குறிப்பாக இன்று நாடு இருக்கும் நிலைமையில் நாம் நம்மாலான உதவியை மற்றவர்களுக்குச் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். அவ்வாறு செய்வதன் மூலம் நமக்குப் புண்ணிய பலம் கிடைக்கும் என்பதோடு மனநிறைவும் உண்டாகும்.

இந்த அக்னி சூட்டை சமாளிக்க சில டிப்ஸ்

#வெயில் அதிகரிக்கும் போது ஆக்சிஜன் லெவல் மிகக் குறைவாக இருக்கும் எனவே மே மாதம் முடியும் வரை மதியம் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரை
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும்.

#நோயாளிகள் கர்ப்பிணிகள் சற்று எச்சரிக்கையுடன் இருங்கள்.

#ஐஸ் கட்டிகள், ஐஸ் வாட்டர், கார்பனேட் குளிர்பானங்கள் கண்டிப்பாக தவிர்க்கவும். பழச்சாறு அருந்தலாம் அதுவும் ஐஸ் போடாமல், மற்றும் இளநீர்... இது எல்லாவற்றையும் விட மிகச் சிறந்தது மோர். பாட்டிலில் எடுத்து செல்லுங்கள்.‌

#அனைவரும் காலையிருந்தே மோர் மற்றும் நீராகாரங்களை அடிக்கடி உட்கொள்ளுங்கள்.

#காபி டீ இன்னும் ஒரு மாதத்திற்கு வேண்டாம். காலையில் சுடுநீரில் இஞ்சி போட்டு சாப்பிட்டு வர பித்தம் தணியும்.

#முதலுதவி போல எலுமிச்சை எப்போதும் வீட்டில் இருக்கட்டும்.

#மாமிச உணவு, அதிக எண்ணெய் மற்றும் காரம் வேண்டாம்.

#வெயிலில் இருந்து வந்தவுடன் சிறிது நேரம் சென்று வியர்வை தணிந்தவுடன் தண்ணீர் அருந்தவும். உடனே ஐஸ் வாட்டர் அருந்தினால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். மூளையில் இருந்து வரும் நரம்புகள் ஒலியின் வேகத்தை விட அதிக ஆற்றலை செலுத்தி என்ன நடக்கிறது என அறிய முயற்சி செய்யும். அந்த வேகத்தை இரத்தம் நாளங்கள் தாங்க முடியாமல் வெடித்து விட வாய்ப்புண்டு. உடனே அருந்த வேண்டுமென்றால் சிறிதளவு மிதமான வெந்நீர் அருந்தினால் உடல் சமநிலை அடையும். ஆபத்தில் இருந்து தப்பலாம்.

#மண் பானை நீர் நம்மை எல்லா காலத்திலும் காக்கும்.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
Agni Natchathiramheatheatwavekathiriveilson heat
Advertisement
Next Article