For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

நடிகர் விஜய் கல்வி விருது வழங்கும் விழாத் ஹைலைட்ஸ்!

05:33 PM Jun 28, 2024 IST | admin
நடிகர் விஜய் கல்வி விருது வழங்கும் விழாத் ஹைலைட்ஸ்
Advertisement

க்டர் விஜய் தேர்தல் கமிஷனில் பதிவுக்காக அனுப்பியுள்ள தமிழ வெற்றிக் கழகம் சார்பில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை தொகுதி வாரியாக அழைத்து, பாராட்டி சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் கல்வி விருது வழங்கும் விழா சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. தவெக தலைவர் விஜய் விழாவுக்கு தலைமை தாங்கி மாணவர்களுக்கு பரிசு பொருட்கள், ஊக்கத்தொகை வழங்கினார்.

Advertisement

32 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவை தனது பக்கம் கட்டி போட்டிருக்கும் 'தளபதி' விஜய் அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவங்கினார்.கட்சியை துவங்கும் முன் பல்லாண்டுகளாக இயங்கி வந்த தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி, அதன் மூலம் பல நற்பணிகள் செய்து வந்தார். இந்த ஆண்டு கட்சியை துவங்குவதற்கு அடித்தளம் அமைப்பது போல், கடந்த ஆண்டு ஜுன் 17-ஆம் தேதி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புத் தேர்வில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களை அங்கீகரிக்கும் விதமாக சான்றிதழும் ஊக்கத் தொகையும் அளித்து உத்வேகப்படுத்தினார்.

Advertisement

இந்த ஆண்டு தமிழக வெற்றி கழக கட்சித் தலைவராக மீண்டும் இந்த கல்வி விருது வழங்கும் விழாவின் மூலம் 21 மாவட்டங்களைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புத் தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொகுதிகள் வாரியாக தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு, அவர்களது பெற்றோர் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத்தக்கையும் வழங்கி கௌரவித்தார்.கடந்த வருடம் மேடையில் செல்ஃபி எடுப்பது, ஆட்டோகிராஃப் வாங்குவது என மாணவர்கள் செய்த விஷயங்கள் வைரலானது. இதனால், கடந்த வருடம் அதிக நேரம் ஆனதை அடுத்து இந்த வருட நிகழ்விற்கு மாணவர்கள், பெற்றோர்கள் மொபைல் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது.

பரிசு வழங்குவதற்கு முன்பாக மேடையில் பேசிய விஜய், மாணவர்களுக்கு அடுத்த வாழ்க்கை குறித்து அறிவுரை வழங்கினார். உங்களுக்கு பிடித்த துறையை தேர்வு செய்து கொள்ளுங்கள். வீட்டில் கலந்து பேசி தேவையுள்ள துறையை தேர்ந்தெடுங்கள். இன்றைக்கு நமக்கு தேவைப்படுவது நல்ல தலைவர்கள் தான். அரசியலும் ஒரு வேலைவாய்ப்பாக வரவேண்டும் என்பதே எனது விருப்பம். நல்ல தலைவர்கள் வேண்டுமா? வேண்டாமா? என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என கூறினார்.

தொடர்ந்து நண்பர்கள் தவறான பழக்கத்தில் நுழைந்தால் அவரை உடனடியாக மீட்டெடுங்கள். சமூகத்தில் போதை பழக்கம் அதிகரித்து வருகிறது. ஒரு அரசியல் தலைவராக எனக்கும் அச்சம் உள்ளது. நீங்கள் இது போன்று போதைக்கு அடிமையாகிவிடக்கூடாது என அறிவுரை வழங்கினார். மேலும், "Say no to temporary pleasures, say no to drugs" என கூறி மாணவர்களை உறுதிமொழி ஏற்க வைத்தார். பிறகு, உரையை முடித்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்க தொடங்கினார்.

முதல் கட்டமாக 21 மாவட்டங்களை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் சிறப்பம்சமாக 9 மாணவர்களுக்கு வைர மோதிரம் மற்றும் வைர கம்மலை விஜய் பரிசாக அளித்தார்.இந்நிகழ்வில் 12-ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த, சென்னை மாவட்டம் கொளத்தூர் தொகுதியைச் சேர்ந்த S.பிரதிக்ஷா, திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதியைச் சேர்ந்த E.மகாலட்சுமி, செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் தொகுதியைச் சேர்ந்த தோஷிதா லட்சுமி ஆகிய மாணவிகளுக்கு 'வைர தோடு' வழங்கி கௌரவித்தார் ' 'விஜய்.

அதே போல 10-ஆம் வகுப்பிலும் தருமபுரி மாவட்டம் அரூர் தொகுதியைச் சேர்ந்த தேவதர்ஷினி மற்றும் A.சந்தியா, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியைச் சேர்ந்த K.காவ்யாஶ்ரீ, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியைச் சேர்ந்த R.கோபிகா, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியைச் சேர்ந்த D.காவ்யா ஜனனி, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியைச் சேர்ந்த சஞ்சனா அனுஷ் ஆகியோருக்கு வைர மோதிரம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதுதவிர நாங்குநேரியைச் சேர்ந்த மாணவன் சின்னத்துரைக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.

மேடையில் மாணவர்களும் பெற்றோர்களும் விஜயுடன் ஃபோட்டோ எடுக்கும் போது ஹார்ட்டின் போஸ், ’மாஸ்டர்’ பட போஸ் என புகைப்படங்கள் எடுத்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. மாணவர்கள் கேட்டதற்காக முகம் சுழிக்காமல் புன்னகையுடன் போஸ் கொடுத்து மகிழ்ந்தார் விஜய்.இன்னொரு பக்கம் மேடையில் மாணவரின் பெற்றோர் ஒருவர் விஜயின் ‘வாங்கண்ணா...வணக்கங்கணா’ பாடலை கொஞ்சம் வரிகள் மாற்றி ‘உங்களை முதலமைச்சர் ஆக்குவோங்கண்ணா’ எனப் பாடி வைரலாகி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து வரும் புதன்கிழமை(03-07-2024) அன்று மீதி உள்ள 19 மாவட்டங்களைச் சார்ந்த மாணவ,மாணவியருக்கும் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா இதே திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

விழாவிற்கு வந்த அனைவருக்கும் சிறப்பான மதிய உணவு வழங்கப்பட்டது.

Tags :
Advertisement