தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

சாதிச்சிட்டோமில்லே - முதல்வர் பெருமிதம்!

01:23 PM Sep 14, 2024 IST | admin
Advertisement

மிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஆகஸ்ட் 27ம் தேதி முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றார்.சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ நகரில் ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 17 பயணத்தை முடித்து கொண்டு, நேற்று(செப்.,13) அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட முதல்வர் துபாய் வழியாக, இன்று(செப்.,14) சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை தமிழ்நாடு அரசு சார்பிலும், திமுக-வினர் சார்பிலும் பலத்த வரவேற்பு அளித்தனர்.

Advertisement

விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கேள்விகளுக்கு அளித்த பதில்கள்:

Advertisement

முதலீடுகள் தொடர்பாகவும், அமெரிக்க பயணம் தொடர்பாகவும் வெள்ளை அறிக்கை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைக்கின்றனரே? 

அமெரிக்க பயணத்துக்கு முன்னதாகவே, தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் வந்த முதலீடுகள் குறித்து நான் விளக்கமாக கூறியுள்ளேன். அதுமட்டுமின்றி தொழில்துறை அமைச்சர் புள்ளிவிவரங்களுடன் விளக்கியுள்ளார். சட்டப்பேரவையிலும் தெளிவாக கூறியுள்ளார். அதை குறிப்பாக எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியும் படித்துப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.பழனிசாமி முதல்வராக இருந்தபோது முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்வதாகக் கூறினர். அதில் 10 சதவீத ஒப்பந்தம் கூட நிறைவேறவில்லை. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதை கூறினால் அவருக்கு மிகப்பெரிய அவமானமாக இருக்கும் என்பதால் அதை தவிர்த்துள்ளேன்.

தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிதி வேண்டும் என்றால் புதிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் உங்களுக்கு பதிலளித்துள்ளார். அதே போல் மெட்ரோ ரயில் திட்டம் 2-க்கு நாங்கள் கடனுதவி பெற்றுத்தந்துள்ளோம் என்று மத்திய நிதியமைச்சர் கூறியுள்ளார். இந்த இரண்டு பெரும் நிதித்தேவையை பிரதமரை சந்தித்து வலியுறுத்துவீர்களா?

நிச்சயமாக, உறுதியாக மெட்ரோ தொடர்பாக சந்திப்பேன். பள்ளிக் கல்வியில் புதிய கல்விக் கொள்கையை ஏற்பது குறித்து அமைச்சர்களை அதிகாரிகள் சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து பிரதமரிடத்தில் நேரம் கேட்டு, அவரை சந்தித்து வலியுறுத்த உள்ளேன் என்பதை உறுதியுடன் கூறிக் கொள்கிறேன்.

அமெரிக்க பயணத்தின் போது, எதிர்பார்த்த அளவுக்கு முதலீடுகள் கிடைத்துள்ளதா? குறைந்த அளவு முதலீடுகள் தான் ஈர்க்கப்பட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளாரே?

இது அரசியல் நோக்கத்துடன் கூறப்படுவது. இதில் நாங்கள் எதிர்பார்த்தைது விட அதிக முதலீடுகள் வந்துள்ளது. உறுதியான முதலீடுகளாகவும் வந்துள்ளது. அதில் சந்தேகம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

முன்னதாக ''அமெரிக்க பயணம் தமிழ்நாட்டு மக்களுக்கான சாதனைக்குரிய பயணமாக அமைந்துள்ளது. அமெரிக்காவில் இருந்த 17 நாட்களும் முக பயனுள்ளதாக இருந்தது. உலகின் புகழ்பெற்ற 25 நிறுவனங்களின் உயரதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தினேன்.அமெரிக்க பயணத்தின் மூலம் 18 நிறுவனங்களுடன் மொத்தம் ரு.7618 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் 11,516 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். அமெரிக்க பயணம் ஒரு வெற்றிகரமான பயணம் மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கான சாதனை பயணம். இந்த பயணம் மிகப்பெரிய பயனுள்ள பயணமாக அமைந்துள்ளது.

தமிழ்நாடு அரசு அளித்த நம்பிக்கையை ஏற்றுக் கொண்டு FORD நிறுவனம் மீண்டும் தமிழகத்தில் உற்பத்தியை தொடங்க முன்வந்துள்ளது. அந்த நிறுவனத்திற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க உத்தரவிட்டுள்ளேன். மேலும் இன்னும் பல நிறுவனங்கள் எதிர்காலத்தில் தமிழகத்திற்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது என்று கூறினார். இன்னும் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளன.

ஜிஎஸ்டி விவகாரத்தில் நிர்மலா சீதாராமனின் செயல் வெட்கப்பட வேண்டியது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி குறித்து தொழிலதிபர் நியாயமான கோரிக்கையை முன்வைத்தார். ஜிஎஸ்டி விவகாரத்தை மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர்'' என்று சொன்னார்

Tags :
Cm Mk StalininvestmentMK Satainusஅமெரிக்காமுதலீடுமுதல்வர்ஸ்டாலின்
Advertisement
Next Article