For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பிரிட்டிஷ் சைபர் கிரைம் டீமான 'ஆக்சன் பிராட்' விடுத்துள்ள எச்சரிக்கை!.

08:30 PM Aug 14, 2024 IST | admin
பிரிட்டிஷ் சைபர் கிரைம்  டீமான  ஆக்சன் பிராட்  விடுத்துள்ள எச்சரிக்கை
Advertisement

தொழில்நுட்பங்களை வெகுஜன மக்கள் எப்போது அதிகம் பயன்படுத்துகிறார்களோ, அப்போதே அதே தொழில் நுட்ப ஊடாகவே சென்று மக்களை ஏமாற்றும் செயல்முறையும் அதிகரித்து வருகிறது.``வாட்ஸ்அப்களில் மிஸ்டு கால்கள், வீடியோ அழைப்புகள், வேலை வாய்ப்புகள், முதலீட்டுத் திட்டங்கள், ஆள்மாறாட்டம், கடத்தல் மற்றும் ஸ்கிரீன் ஷேர் ஆகிய பெயர்களில் ஏழு வகையான மோசடிகள் நடக்கின்றன என்று முன்னரே வார்னிங் வந்த நிலையில் வாட்ஸ் அப் குரூப் சாட் மூலம் நமது தனிநபர் சார்ந்த தரவுகளை ஆன்லைன் மோசடியாளர்கள் நூதனமாக திருடும் அதிர்ச்சி தகவல் தற்போது தெரியவந்துள்ளது. இதில் இருந்து எச்சரிக்கையாக இருக்க பிரிட்டிஷ் சைபர் கிரைம் மையமான 'ஆக்சன் பிராட்'   அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

இது குறித்த லேட்டஸ்ட் எச்சரிக்கை

Advertisement

வாட்ஸ் அப் பயனருக்கு, மர்ம நபர்கள் வாட்ஸ் அப் மூலமாக ஆடியோ கால் செய்கின்றனர். அப்போது, தான் மற்றொரு குரூப்பை சேர்ந்த நபர் என்றும், அந்த குரூப்பை சேர்ந்த பயனர்கள் பங்கேற்கும் குரூப் காலில் நீங்களும் இணைய வேண்டும் என்றால், நாங்கள் அனுப்பும் ஒன்டைம் பாஸ்கோட்-ஐ (ஓடிபி) எங்களிடம் சொன்னால் போதும் எனவும் ஆசை வார்த்தையாக கூறுகின்றனர். இதில் ஏமாறும் பயனர்கள், ஓடிபி.,யை சொன்னதும் அதனை மர்ம நபர்கள் வேறொரு மொபைல் சாதனத்தில் வாட்ஸ் அப் ஆக்டிவேட் செய்கின்றனர்.

இதனால் அந்த மர்ம நபரின் மொபைலிலும் பயனரின் வாட்ஸ்ஆப் கணக்கு செயல்பட துவங்கிவிடும். பிறகு, அதில் இருந்து பயனர் கணக்கின் இரண்டுகட்ட சோதனையை (Two step verification) 'ஆன்' செய்து தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகின்றனர். இதற்கடுத்து பயனர்களால் அந்த வாட்ஸ் அப் கணக்கை மீட்டெடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

அதிலிருந்து மீண்டு வருவதற்குள் பயனரின் வாட்ஸ் அப் வழியாக பலருக்கும் மெசேஜ் அனுப்பி, தனக்கு அவசர பணத் தேவை இருப்பதாக கூறி வாட்ஸ்ஆப் பேமெண்ட் மூலம் பணத்தை ஏமாற்றி வாங்கி விடுகிறார்கள். இது தவிர சம்பந்தப்பட்ட கணக்கில் இருந்து புகைப்படங்கள், வீடியோக்கள், அலுவலக கோப்புகள் உள்ளிட்ட தனிப்பட்ட ரகசியங்களையும் திருடி விடுகின்றனர்.அதன்படி வாட்ஸ் ப் குரூப் சாட்டிங்கில் நடைபெறும் மோசடி தொடர்பாக இதுவரை 630 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் பயனாளர்கள் இருக்க வேண்டுமெனவும் எச்சரித்துள்ளது.

தவிர்ப்பது எப்படி?

இது போன்ற மோசடியாளர்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க, பயனர்கள், முகம் தெரியாதவர்களிடம் இருந்து பெறப்படும் டெக்ஸ்ட் மெசேஜ் மற்றும் வீடியோ, ஆடியோ கால்கள் வந்தால் மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். உங்களுக்கு வரும் இணையதள முகவரி (website link) கிளிக் செய்வதற்கு முன்னும் கவனத்துடன் கையாள வேண்டும். தெரியாத நபர்களிடம் இருந்து வரும் லிங்க் போன்ற மெசேஜ்களை கிளிக் செய்யாமல் இருப்பதே சிறந்தது. அதேபோல், ஓடிபி., போன்ற கடவுச்சொல்களை எந்த சூழலிலும் பிறருக்கு பகிரக்கூடாது. மோசடி தொடர்பாக எப்போதும் விழிப்புடன் இருந்தால் மட்டுமே, இந்த சுழலில் சிக்காமல் தப்ப முடியும்.

Tags :
Advertisement