For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

கறந்த பால் மூலம் பறவைக் காய்ச்சல் அல்லது எச்5என்1 எனப்படும் வைரஸ் பரவுகிறது -உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

01:15 PM Apr 21, 2024 IST | admin
கறந்த பால் மூலம் பறவைக் காய்ச்சல் அல்லது எச்5என்1 எனப்படும் வைரஸ் பரவுகிறது  உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
Advertisement

முன்னரே கலிபோர்னியா யுனிவர்சிட்டி கறந்த பசும் பாலை பச்சையாக பருகுவதால் பல நோய்கள் மற்றும் உணவு மூலம் பரவக் கூடிய நோய்கள் வர வாய்ப்புள்ளதாக தெரிவித்தது. அத்துடன் பாக்டீரியா மூலம் பரவக் கூடிய நோய்கள் உடலில் வருவதற்கும் இது வழிவகுக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவில், மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. அந்நாட்டின் 8 மாகாணங்களில் இருக்கும் 29 பண்ணைகளில் பராமரிக்கப்படும் மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவியிருக்கிறது. அது குறித்து ஆராய்ந்ததில், கறந்த பாலில் பறவைக் காய்ச்சலை பரப்பும் எச்5என்1வைரஸ் இருப்பது, மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

பால் என்பது, கால்சியம் , சோடியம் , புரோட்டீன் வைட்டமின் A, K மற்றும் B12, கொழுப்பு, அமினோ ஆசிட், ஆண்டி ஆக்ஸிடண்ட் என பல ஊட்டச்சத்துகளை உள்ளடக்கியது. சைவ உணவு உண்பவர்களுக்கு அதிக புரதம் கிடைக்க சிறந்த உணவாக இருப்பது பால். பாலில் அதிக அளவில் ப்ரோட்டீன் உள்ளது. கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் பாலில் கால்சியம், ‘கேசின்’ புரதம், வைட்டமின் ‘ஏ’ ஆகியவை உள்ளன. ’கேசின்’ புரதத்தில் ஏ-1, ஏ-2 என்று இரண்டு வகை உள்ளன. அயல்நாட்டு கலப்பின மாடுகளில் ’ஏ-1 கேசினும்’, நம் நாட்டு மாடுகளில் ’ஏ-2 கேசினும்’ இருக்கின்றன. ’ஏ-1 கேசின்’ பாலை உட்கொள்ளும்போது அது செரிமானத் தின்போது BCM7 (Beta-Caso-Morpine-7) ஆக மாற்றமடைகிறது. இது நீரிழிவு, நரம்புத் தளர்ச்சி, ஆட்டிஸம் போன்ற பாதிப்புகளை உருவாக்கும். மாறாக நாட்டு மாடுகளிலிருந்து கிடைக்கும் ’ஏ-2 கேசின்’ பால் செரிமானத் தின்போது ரசாயன மாற்றம் அடையாமல் உடலுக்கு நன்மை செய்கிறது. மேற்கண்ட உண்மைகள் பல்வேறு அறிவியல் ஆய்வுகள் மூலம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

ஆக., பால் குடிப்பதால் நன்மைகள் அதிகம் உள்ளன என்பதில், மாற்று கருத்து ஏதும் இல்லை, ஆனால் , நாம் வாங்கி பயன்படுத்தும் பாக்கெட் பால் உண்மையிலேயே ஆரோக்கியமானது தானா என்கிற கேள்வி மக்களின் மனதில் எழுவதேயில்லை. உங்கள் குழந்தைகளின், குடும்பத்தார்களின் ஆரோக்கியத்தின் மேல் உங்களுக்கு நிஜமாகவே அக்கறையிருக்கிறதா… அப்படியானால் இனி பாக்கெட் பாலை சுத்தமாக பயன்படுத்தவே பயன்படுத்தாதீர்கள் என்போருமுண்டு.. மிகப் பெரிய சந்தையான பாக்கெட் பால் விற்பனை, கொடி கட்டிப் பறப்பது நம் தமிழகத்தில் தான். அதே போல் அதிகளவில் கலப்படங்கள் நிகழ்வதும் பாக்கெட் பாலில் தான். மருத்துவர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும் மாட்டில் இருந்து கறந்த பாலை அருந்துவதுதான் சிறந்தது என்றும், பாக்கெட் பால் அருந்துவதால் ஒரு நன்மையும் இல்லை என்கிறார்கள். அப்படி கெமிக்கல்களின் கலவையான பாக்கெட் பாலைத் தான் நாம் வாங்கி, நீண்ட நாள்கள் ப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்துகிறோம்.

தொழில்நுட்பத்தையும், அறிவியலையும் பயன்படுத்தி என்றைக்கு நாம் பாலைப் பதப்படுத்த ஆரம்பித்தோமோ அன்றே அதற்குள் மிகப் பெரிய வணிகம் நுழைந்து விட்டது. மாட்டில் இருந்து கறக்கப்பட்ட பால் 3 அல்லது 4 மணிநேரத்தில் கெட்டு விடும். மூன்று மணிநேரம் வரை பால் கெடாமல் இருப்பதற்கான பொருளும் இயற்கையிலேயே பாலில் கலந்து இருக்கிறது. ஆரம்ப காலங்களில் பால் கலப்படம் என்றால், பாலில் தண்ணீர் கலப்பதைத்தான் சொல்வார்கள். தண்ணீர் கலந்தால் பரவாயில்லை.. பாலின் தரம் மட்டும் தான் கெடுகிறது. கெமிக்கல்களைக் கலப்பதால் நம் ஆரோக்கியமும் கெடுகிறது. பால் சீக்கிரம் கெட்டுப் போகிறது என்பதற்காக, பாலின் அமிலத் தன்மை நீக்க காரத் தன்மை உள்ள நியூட்ரலைசர்களைப் பயன்படுத்துகின்றனர். மேலும், பாலில் யூரியா கலப்பது, காஸ்டிக் சோடா கலப்பது என்று கலப்படம் செய்கிறார்கள். சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு விசாரணை நடந்த போது, ஒட்டு மொத்த இந்தியாவில் 68 சதவிகிதப் பால் கலப்படம் இருப்பது தெரிய வந்தது நினைவிருக்கும்.. காய்கறிகள், கீரைகளில் இருக்கும் சத்துகளை விட பாலில் அதிகச் சத்துகள் இல்லை. பாக்கெட் பாலில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் மட்டுமே பால் இருக்கிறது. பாதிக்கும் மேல் கெமிக்கல்கள் தான் இருக்கிறது. ஓர் உயிரினத்தில் இருந்து இயற்கையாகக் கிடைக்கும் பாக்கெட் பாலில் புரோட்டின், கொழுப்பு போதுமான அளவுக்கு இருப்பதில்லை. பாக்கெட் பாலில் செயற்கையாக புரோட்டின், கொழுப்பு சேர்க்கின்றனர்.

நிலைமை இப்படி இருக்கையில்தான் பறவைக் காய்ச்சல் அல்லது எச்5என்1 எனப்படும் வைரஸ், கறந்த பாலில் இருப்பதை உலக சுகாதார நிறுவனம் கண்டறிந்து கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.இந்தப் பாலானது, முறையாக பாக்டீரியாக்களை அகற்றும் சுத்திகரிப்புப் பணிக்குச் செல்லாத பால் என்றும் குறிப்பிட்டுள்ளது. பெரும்பாலும் விற்பனைக்கு வரும் பால் என்பது சுத்திகரிக்கப்பட்டதாகவே இருக்கும், அது பாதுகாப்பானது என்றும் விளக்கம் கொடுத்துள்ளது. அமெரிக்காவில், மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. அந்நாட்டின் 8 மாகாணங்களில் இருக்கும் 29 பண்ணைகளில் பராமரிக்கப்படும் மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவியிருக்கிறது.

இந்த நிலையில், கறந்த பாலில் பறவைக் காய்ச்சலை பரப்பும் எச்5என்1வைரஸ் இருப்பது, மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் கறந்த பாலில் இருந்து எச்5என்1 வைரஸ் கண்டறியப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனமும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. எனவே, கறந்த பாலை அருந்துவதைத் தவிர்க்குமாறும் சுத்திகரிக்கப்பட்ட பாலை அருந்துவதே பாதுகாப்பானது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாலில் இருக்கும் கொடிய கிருமிகளை சுத்திகரிப்பு மூலம் அழித்துவிடலாம், இது மிகவும் எளிதானதும் கூட. தற்போது பரவி வரும் பறவைக் காய்ச்சல் வைரஸானது பறவைகள், விலங்குகள், மனிதர்களிடையே பரவி வருகிறது. இந்த வைரஸானது மிக எளிதாக மனிதர்களுக்குப் பரவி அவர்களைக் கொல்கிறது.

இது தற்போது வௌவால்கள், பூனைகள், கரடி, நரி, பென்குயின்களுக்கும் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத் தொடக்கத்தில் பறவைக் காய்ச்சல் பரவும் விலங்குகளின் பட்டியலில் மாடு சேர்க்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கேரள மாநிலம் ஆலப்புழாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவது சுகாதார அதிகாரிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. கோழிகளுக்கு மட்டும் பரவி வந்த பறவைக்காய்ச்சல், அங்குள்ள வாத்துகளுக்கும் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக்கும்..!

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement