யார் எனத்தெரியாமல் மெயில் அனுப்ப உதவும் தளம்!
ஏதோ ஒரு நியாயமான காரணத்திற்காக அனாமதேய மெயில் அனுப்பும் தேவை ஏற்பட்டு, அதற்கான சேவையையும் தேடிக்கொண்டிருந்தால் லெட்டர்.ஷ் (https://letter.sh/ ) இணையதளம் ஏற்றதாக இருக்கும். இந்த தளம், அனுப்புகிறவர் யார் எனத்தெரியாமல் மெயில் அனுப்ப உதவுகிறது.
அன்பிற்கினியர்களுக்கு அல்லது மேலதிகாரிக்கு, அன்பான அல்லது கோபமான கருத்துக்களை மெயிலில் அடையாளம் தெரியாமல் அனுப்பி வைக்கலாம் என்கிறது இந்த தளம். சக ஊழியரை பாராட்டி ஆச்சர்யத்தில் ஆழ்த்தவும் இந்த சேவையை பயன்படுத்தலாம்.
அனுப்பும் மெயிலுக்கான பின்னணி தோற்றத்தையும், இதர துணை அம்சங்களையும் தேர்வு செய்து சுவாரஸ்யம் கூட்டலாம்.
சுவாரஸ்யமான சேவை தான். ஆனால், வில்லங்கோ நோக்கிலோ பயன்படுத்துவதை தவிர்க்கவும். அதே நேரத்தில் இது போன்ற அனாமதேய சேவையை பயன்படுத்துவது பாதுகாப்பானதா என்றும் யோசிப்பது நல்லது. ( இந்த தளம் ஆபத்தானதாக தெரியவில்லை என்பதை மீறி, எச்சரிக்கை அவசியம்.).
இந்த தளத்தை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் கவனமாக பயன்படுத்துங்கள்!