மொழி ஆர்வம் உள்ளோர்களுக்கு உதவும் தளம்!
புதிய மொழி கற்றுக்கொள்வதற்கு இணையம் எண்ணற்ற வாய்ப்புகளை கொண்டுள்ளது. அந்த வாய்ப்புகளை ஏஐ நுட்பம் மேலும் எளிதாகவும், சுவாரஸ்யமாகவும் மாற்றி வருகிறது. இதற்கான உதாரணம் இந்த தளம் – லிங்க்குவிஸ் (https://lingquiz.com/ ).
லிங்க்குவிஸ் தளம், புதிய மொழி கற்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் வழக்கமாக எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைக்கு தீர்வாக அமைகிறது.
புதிய மொழியை கற்றுக்கொள்ளும் போது, அதில் தொடர்ந்து புரியாத புதிய வார்த்தைகளை எதிர்கொள்ள நேரும். பழகி கொண்டிருக்கும் புதிய மொழியில் கட்டுரை அல்லது புத்தகத்தை படிக்கும் போது அல்லது பாட்காஸ்டிங்கை கேட்கும் போது, புரியாத புதிய வார்த்தைகள் இருக்கும். அவற்றை குறித்து வைத்து, பொருள் தெரிந்து கொள்ள இந்த இணையதளம் வழி செய்கிறது.
இந்த தளத்தில், புதிய சொற்களை நமக்கான பக்கத்தில் குறித்து வைக்கலாம். பின்னர் அவற்றை அணுகி பொருள், பயன்பாடு உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் வார்த்தைகளை மறக்காமல் இருப்பதோடு, அவற்றை நினைவில் கொண்டும் பயன்படுத்தலாம்.
இதற்காக, பிளாஷ்கார்டு உள்ளிட்ட வசதியை அளிக்கிறது. தொடர்ந்து புதிய வார்த்தைகள் சார்ந்த விநாடிவினா உள்ளிட்ட வசதிகளை அளிக்க உள்ளது. மொழி ஆர்வம் இருந்தால் இந்த தளத்தை குறித்து வைத்துக்கொள்ளுங்கள் அல்லது நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள்!