செயற்கை சூரிய கிரகணத்தை உருவாக்கும் செயற்கைக்கோள்; இஸ்ரோ நவம்பர் 29–ல் ஏவுகிறது!
செயற்கை சூரிய கிரகணத்தை உருவாக்கும் ‘புரோபா-3’ செயற்கைக்கோள் வரும் நவம்பர் 29ம் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து, விண்வெளியில் செயற்கை சூரிய கிரகணத்தை உருவாக்க, ‘புரோபா-3’ என்ற இரட்டை செயற்கைக்கோளை வடிவமைத்து உள்ளது.விண்ணில் இருந்து புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பும் வகையில் இந்த இரட்டை செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது, ‘புரோபா-3’ செயற்கைக்கோள் இறுதிக்கட்ட சோதனையில் இருக்கிறது.
ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திற்கு இன்று அந்த இரட்டை செயற்கைக்கோள் அனுப்பி வைக்கப்பட உள்ளது. சற்று வித்தியாசமான சுற்றுப்பாதையில் இந்த செயற்கைக்கோள் செலுத்தப்பட உள்ளது.இந்த இரட்டை செயற்கைக்கோள், செயற்கை சூரிய கிரகணத்தை உருவாக்கக் கூடிய சக்தி கொண்டவை.அதிக நீள்வட்ட சுற்றுப்பாதையை இந்த கொண்டிருக்கும். சந்திரயான்–4 உள்ளிட்ட எதிர்கால திட்டங்களுக்கு உதவியாக இந்த திட்டம் இருப்பதால் இந்த சோதனை முக்கியத்துவம் பெறுகிறது.