தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பாரதி போன்ற ஆளுமை நூற்​றாண்​டுக்கு ஒருமுறை கிடைக்​கக்​கூடியது! - பிரதமர் மோடி புகழஞ்சலி!

05:00 AM Dec 12, 2024 IST | admin
Advertisement

''பாரதி போன்ற ஆளுமை, நுாற்றாண்டுக்கு ஒருமுறை கிடைக்கக்கூடியது.அவருடைய சிந்தனை, புத்திசாலித்தனம், பல பரிமாண ஆளுமை ஆகியவை எல்லாரையும் ஆச்சரியப்படுத்துகின்றன'' என புகழ்ந்த பிரதமர் மோடி, அவரது சிந்தனைகள் இன்றும் மக்களுக்கு ஊக்கமளிப்பதாக கூறினார்.மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 143வது பிறந்தநாள் விழா நாடு முழுவதிலும் நேற்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாரதியின் முழுமையான படைப்பு நூல்களின் தொகுப்பை பிரதமர் மோடி டெல்லியில் நேற்று வெளியிட்டார்.இந்நூல்களை சீனி விஸ்வநாதன் தொகுத்துள்ளார். அலையன்ஸ் நிறுவனம் இதனை வெளியிட்டுள்ளது. இவ்விழாவில் கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவாத், நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். .

Advertisement

இந்த தொகுப்​பில் சுப்​பிரமணிய பாரதி​யின் எழுத்​து​களின் பதிப்பு​கள், விளக்​கங்​கள், ஆவணங்​கள், பின்னணி தகவல்கள் மற்றும் தத்துவ விளக்கக் காட்சி போன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளன. முதன்​முறையாக பாரதி​யார் படைப்புகள் காலவரிசைப்படி நூல்​களாக வெளி​யிடப்​பட்​டுள்ளன. தமிழகத்​தின் 123 ஆண்டுகள் பழமையான அலையன்ஸ் நிறு​வனம் இதனை வெளி​யிட்​டுள்​ளது.

நிகழ்ச்​சி​யில் பிரதமர் நரேந்திர மோடி பேசி​ய​தன் சுருக்கம்:

Advertisement

மகா கவி சுப்​பிரமணிய பாரதியாரின் பிறந்​தநாளை நாடு இன்று கொண்​டாடு​கிறது. நான் அவரை பயபக்தி​யுடன் வணங்​கு​கிறேன். அவரது மரபுக்கு எனது இதயப்​பூர்​வமான அஞ்சலியை செலுத்து​கிறேன்.மகாகவி சுப்​ரமணிய பாரதி​யின் படைப்புகள் வெளிவருவது என்பது அவருக்கு குறிப்​பிடத்​தக்க மரியாதையை அளிப்​ப​தாகும். நாட்​டின் தேவைகளை மனதில் கொண்டு பாடு​பட்ட சிறந்த சிந்​தனை​யாளர் சுப்​ரமணிய பாரதி. அவருடைய பார்வை மிகவும் விசால​மானது. அந்த காலகட்​டத்​தில் நாட்டுக்​குத் தேவையான அனைத்து திசைகளி​லும் அவர் பணியாற்றினார்.

மகா கவிஞர் சுப்​பிரமணிய பாரதி​யாரின் படைப்புகளை வெளி​யிடு​வ​தில் நான் பெருமை கொள்​கிறேன். பாரதி​யார் தமிழகத்​தின், தமிழ் மொழி​யின் பாரம்​பரியம் மட்டுமல்ல, அவர் தனது ஒவ்வொரு மூச்​சை​யும் அன்னை பாரதத்​தின் சேவைக்காக அர்ப்​பணித்த சிந்​தனை​யாளர். நம் நாட்​டில், வார்த்​தைகள் வெறும் வெளிப்​பாடாக மட்டும் இல்லாமல், ஆழமான முக்​கி​யத்து​வத்​தைக் கொண்​டுள்ளன. வார்த்​தைகளின் எல்லை​யற்ற ஆற்றலைப் பொக்​கிஷ​மாகக் கருதும் கலாச்​சா​ரத்​தைச் சேர்ந்​தவர்கள் நாம். அதனால்​தான் நம் ஞானிகளின் வார்த்​தைகள் அவர்​களின் எண்ணங்கள் மட்டுமல்ல, அவர்​களின் சிந்​தனை, அனுபவம் மற்றும் ஆன்மீக பயிற்​சி​யின் சாறாக அமைந்​துள்ளன.

சுப்​ரமணிய பாரதி போன்ற ஆளுமை நூற்​றாண்​டுக்கு ஒருமுறை கிடைக்​கக்​கூடியது. அவருடைய சிந்​தனை, புத்​திசாலித்​தனம், பல பரிமாண ஆளுமை ஆகியவை நம் அனைவரை​யும் ஆச்சரியப்​படுத்து​கிறது. அவரது எண்ணங்​கள், சிந்​தனைகள் நம் எல்லோரை​யும் ஊக்கு​விக்​கிறது. அவரை நோக்கி ஈர்க்​கின்றன. தமிழ் மொழி​யின் பொக்​கிஷமாக தேசியக் கவிஞர் பாரதியாரின் நூல்கள் அமைந்​துள்ளன. பாரதியாரின் படைப்புகள் இன்றும் கூட நம்மை ஊக்கு​விக்​கின்றன.காசி என்று அழைக்​கப்​படும் வாராணசிக்​கும், பாரதிக்​கும் அதிக தொடர்​புண்டு. தனது அறிவைப் பெருக்​கிக் கொள்​வதற்காக வாராணசிக்கு பாரதி​யார் வந்தார். பின்னர் காசி​யிலேயே சில காலம் பாரதி தங்கி​யிருந்​தார். காசிக்​குப் பெருமை சேர்த்​தவர் பாரதி. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Tags :
bharathiyarModiPM
Advertisement
Next Article