தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பெண்களுக்காக 'கேர்ள்ஸ் நைட் அவுட்' என்ற புதிய முயற்சி!- தமிழகத்திலும் நடக்குமா?

08:18 PM Oct 11, 2022 IST | admin
Advertisement

கேரள ஸ்டேட் எர்ணாகுளம் பகுதியிலுள்ள மூவாட்டுப்புழா என்ற பகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் மேத்யூ குழல்நாடன். இவர் அந்த பகுதியில் பெண்களுக்காக 'கேர்ள்ஸ் நைட் அவுட்' என்ற புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளார். இந்த கேர்ள்ஸ் நைட் அவுட் நிகழ்ச்சியில் பெண்களுக்கு என்று இசை நிகழ்ச்சிகள், ஜூம்பா டான்ஸ், தற்காப்பு பயிற்சி, உணவு கடைகள் உள்ளிட்ட பல ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது. 4 நாட்கள் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியானது இரவு நேரத்தில் பெண்கள் சுதந்திரமாக வெளியே செல்ல ஊக்குவிக்கும் வகையில் இருப்பதே இதன் நோக்கமாகும்.

Advertisement

கடந்த 6-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 9-ம் தேதி வரை தினமும் மாலை 5.30 மணிக்கு தொடங்கி இரவு 11.30 மணி வரை நடைபெற்றது. போதுவாக அங்கு வழக்கமாக இரவு 8 - 8.30 மணியளவிலே தங்கள் கடைகளை மூடியிருப்பார்கள். ஆனால் அதற்கு விதிவிலக்காக நிகழ்ச்சி நடைபெற்ற அந்த 4 நாட்களுமே இரவு 11.30 மணி வரை திறக்கப்பட்டிருந்தது.

Advertisement

4 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவை அந்த பகுதி பெண்கள் மிகவும் மகிழ்ச்சியாக உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். எல்லா பெண்களுக்கும் இரவு நேரத்தில் வெளியில் செல்ல விருப்பம் இருக்கும். அதனை பூர்த்தி செய்வதற்காக இந்த 4 நாட்கள் அமைக்கப்பட்டிருந்ததாக அந்த பகுதி மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து அந்த பகுதி எம்.எல்.ஏ., மேத்யூ குழல்நாடன் தெரிவித்ததாவது, "பெண்களுக்கான சுதந்திரத்தையும், இரவு நேரங்களில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் நம் கடமை. அந்த வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த 'கேர்ள்ஸ் நைட் அவுட்' நிகழ்ச்சி பொதுமக்களிடம் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது போன்று கேரளாவின் பிற பகுதிகளில் ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

இது போன்று 'கேர்ள்ஸ் நைட் அவுட்' பல பகுதி பெண்களிடம் வரவேற்பை பெற்று வரும் சூழலில் தமிழகத்திலும் இது போன்ற இரவுகளை கடத்த உதவ வேண்டுமென்ற குரல் ஒலிக்க தொடங்கி உள்ளது

Tags :
'Girl's Night Out'A new venturekeralawomen
Advertisement
Next Article