யு.பி.எஸ்.சி தேர்வெழுவோர்களுக்கு வகுப்பெடுக்கும் 7 வயது சிறுவன்!
இந்திய நாட்டின் மிக கடினமான தேர்வுகளுள் ஒன்று குடிமை பணிக்கான சிவில் சர்விஸ் தேர்வு. நம்மில் பலருக்கும் இந்த தேர்வில் வெற்றி பெற்று IAS, IPS போன்ற இன்னும் பல அதிகாரிகளாக பணியில் சேர்வது போன்ற பல கனவுகளிருக்கும். உழைப்பிற்கும், அர்பணிப்பிற்கும் தயாராக இருக்கும் நம்மில் பலருக்கும் இத் தேர்விற்கு வழிகாட்டியை தேடுவதிலேயே காலத்தைத் தொலைத்து விடுவோம். இச்சூழலில் உ.பி.ஸ்டேட்டில் உள்ள விருந்தாவனத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுவனை அனைவரும் ’கூகுள் குரு’ என்று அழைத்து வருகின்றனர். இந்த கூகுள் குரு சிறுவனே மேற்படி UPSC தேர்வுக்கு படிப்பதில் சிறந்து விளங்குவது மட்டுமல்லாமல், மாணவர்களுக்கு 14 பாடங்களை சொல்லித்தருகிறான். இவனது நினைவாற்றலை கண்டு வியந்தவர்கள் இவனை செல்லமாக 'கூகுள் குரு' என்று அழைத்துவருகின்றனர்.
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) தேர்வுக்கு நிறைய தயாரிப்பு தேவைப்படுகிறது. யுபிஎஸ்சி தேர்வுக்கு பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டத்தைப் படிப்பது மிக முக்கியமானது என்றாலும், அதைக் கற்பிப்பது மிகவும் கடினமாகிறது. சில சமயங்களில், கல்லூரி பேராசிரியர்கள் கூட ஆர்வமுள்ளவர்களுக்கு வெற்றிகரமாக கற்பிக்கத் தவறிவிடுகிறார்கள். பிருந்தாவனை (உத்தர பிரதேசம்) சேர்ந்த ஏழு வயது சிறுவன் ஒருவன் நினைத்துக்கூட பார்க்க முடியாத செயலைச் செய்வதைக் கேட்டால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். UPSC பாடங்களைப் படிப்பது மட்டுமல்லாமல் - 14 பாடங்களை ஆர்வமுள்ளவர்களுக்குக் கற்பிப்பதற்காக அவர் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளான். பிருந்தாவனத்தின் கோர நகர் காலனியில் வசிக்கும் 'கூகுள் குரு' என்று அழைக்கப்படும் குரு உபாத்யாய். ஐந்து வயதிலிருந்தே, UPSC மற்றும் பொறியியல் ஆர்வலர்களுக்கு 14 முக்கியமான பாடங்களை குரு கற்பித்து வருகிறான். இந்த குழந்தை தனது அசாதாரண திறமைக்காக இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் நுழைந்ததுடன் பெரும் கவனத்தையும் கூகுள் குரு என்ற பட்டத்தையும் பெற்றுள்ளது.
அயோத்தி ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திரத்தின் தலைவரான மஹந்த் நிருத்ய கோபால் தாஸ், என்பவர் சமீபத்தில் சிறுவன் உபாத்யாய்க்கு ’இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ சான்றிதழை வழங்கி கௌரவித்தார். ஒரு நேர்காணலில், உபாத்யாவின் தந்தை அரவிந்த் குமார் உபாத்யாய், ”என் மகனுக்கு விரைவாக மனப்பாடம் செய்யும் திறன் உள்ளது. அவன் குழந்தையாக இருக்கும் பொழுதே, 60 நாடுகளின் கொடி மற்றும் அதன் தலைநகரங்களை மனப்பாடமாக தெரிவித்தான். இவனது அறிவாற்றலை கண்ட பல மாணவர்கள் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் பல்வேறு பாடங்களை இவனிடம் கற்பித்து வருகிறார்கள். இதில் பொறியியல் மற்றும் யுபிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களும் அடக்கம்” என்று தெரிவித்துள்ளார்.
மேற்படி ரெக்கார்ட்ஸில் மட்டுமன்றி, கூகுள் குரு பல சாதனைகளையும் படைத்துள்ளார். தேசிய, சர்வதேச அளவில் பல்வேறு இடங்களில் விருந்தினர் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். APJ அப்துல் கலாமைப்போல ஒரு விஞ்ஞானியாகவேண்டும் என்று கூகுள் குரு ஆசைப்படுகிறாராம்.
கூகுள் பையா ஆசை நிறைவேறாதா என்ன?