For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

இரண்டு ரிமோட் கண்ட்ரோல் உள்ள ஒரு 56 இன்ச் டிவி!

05:48 PM Jun 08, 2024 IST | admin
இரண்டு ரிமோட் கண்ட்ரோல் உள்ள ஒரு 56 இன்ச் டிவி
Advertisement

புரியாதது போல நடிப்பது நன்றாக தெரிகின்றது. 😊 இருந்தாலும் இன்னும் கொஞ்சம் புரிய வைப்போம்..!

Advertisement

■தேர்தலுக்கு முன், விலைக்கு வாங்கக்கப்பட்ட ஊடக கருதுத்திணிப்புகள் மூலம் '350 சீட்டுகளை வெல்வோம்' என்று சொல்ல வைத்தீர்கள்.

■தேர்தல் களம் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக இருப்பதை பார்த்துவிட்டு... "400க்கு மேல் வெல்வோம். ராஜிவ்காந்தி பெற்ற 414ஐ முறியடிப்போம்" என்று ஊடக தலைப்புச்செய்திகள் மூலம் 'ச்சாக்கோபார்' என்று தேர்தல் பிரச்சார விளம்பரம் மூலம் 'ஹைப்' செய்தீர்கள்.

Advertisement

■தேர்தல் முடிந்த பின்னர்... 350 முதல் 400 வரைக்கும் வெல்லப்போவதாக விலை கொடுத்து வாங்கப்பட்ட எக்சிட் போல் சர்வேக்கள் மூலம் விளம்பரம் செய்தீர்கள். .

ஆனால்...

★414ம் முறியடிக்கப்படவில்லை.

★உங்களின் ச்சாக்கோபாரும் மண்ணை கவ்வியது.

★சர்வேக்கள் எல்லாம் கூறிய 350 ம் வரவில்லை.

★2019-ல் பாஜக பெற்றிருந்த 303 சீட்டு கூட வரவில்லை.

★மேலும் சரிந்து, 272 என்கிற தனி மெஜாரிட்டிக்கே ஓட்டு எண்ணிக்கையின் போது திணாறிக்கொண்டு இருந்தீர்கள்.

★எல்லாவற்றையும் விட... வாரணாசியில்... 4 ரவுண்டுகளில் நீங்களே பின்னடைவு. "பரமாத்மாவுக்கே.. மரண பயத்தை காட்டிட்டான்டா பரமா..." என்று... சுப்ரமணியபுரம் மீம்ஸ் உலாவ... ஆஹா... கொண்டாட்டம் அங்கிருந்துதான் துவங்கியது.

★'தேர்தல் முடிவுக்கு பின்னர், எதிர்க்கட்சிகள் EVM ஐ குறை கூறுவார்கள்' என்ற நீங்கள்தான்... தோற்றுப்போன பல தொகுதிகளில்... ரீ-கவுண்டிங் கேட்டுக்கொண்டு இருந்தீர்கள்.

★ஆணவத்தின் உச்சத்தில் நின்ற புல்டோசர் மாநிலத்தில் பாஜக அவுட். 'இனி... பார்வையாளர் காலரியில் அமர்ந்துதான் நாடாளுமன்றத்தை பார்க்க முடியும்' என எள்ளி நகையாடப்பட்ட ராஹுல்காந்தி... ரேபரெலியிலும் வெற்றி. அமேதியிலும் காங்கிரசிடம் அகங்கார ஸ்மிர்தி இரானி தோல்வி.

★திருட்டுநிலக்கோயில் கட்டப்பட்ட அயோத்தியிலேயே பாஜக படுதோல்வி. அதனால்... ராமர் மீது ஏற்பட்ட கோபத்தில்... உங்களின் "ஜெய் ஸ்ரீ....ம்" கோஷத்தையே நீங்கள் கைவிட்டீர்கள். இதை என்னத்த சொல்ல.

★இம்முறை உங்களுக்கு மக்கள் தனி மெஜாரிட்டி தரவில்லை. 240 தொகுதிகள் மட்டுமே பெற்ற உங்களின் ஆட்சி... இனிமேல், #மைனாரிட்டி_பாஜக_ஆட்சி என்றே அழைக்கப்பட இருக்கிறது.

★காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அதை மாநிலமாகவே இல்லாமல்... சட்டமன்றம் இல்லா காலணி பிரதேசம் ஆக்கிய உங்களிடம்... பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து கேட்கிறார் ஒருவர். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்கிறார் இன்னொருவர். அவர்கள் கேட்பதை நீங்கள் கொடுத்தாக வேண்டும். ஏனெனில்... நீங்கள் இனி... இரண்டு_ரிமோட்_கண்ட்ரோல் உள்ள ஒரு 56_இன்ச்_டிவி.

★உங்கள் யார் முகத்திலும் மகிழ்ச்சியே இல்லை. எல்லாருமே பேயறைந்தது போன்ற திக்பிரமையிலும் சோகமாகவும் NDA கூட்டத்தில் சுரத்தே இல்லாதது போல அமர்ந்து இருந்தீர்கள்.

★தினமும் 4 காஸ்ட்யூம் மாற்றும் நீங்கள்... காலை, மதியம், மாலை என்று ஒரே உடையில்... 3 வெவ்வேறு இடங்களில் நடந்த 3 வெவ்வேறு நிகழ்ச்சிகளில்... அதுவும்... காவிக்கு பதிலாக பச்சை காஸ்ட்யூமில் இருந்தீர்கள்.

★400 சீட்டுக்கு மேலே பெற்று அரசியல் சாசனத்தையே மாற்றுவோம் என்ற நீங்கள்... முதல் நாளே... அரசியல் சாசன சட்ட புத்தகத்தை தொட்டுக் கும்பிட்டு வணங்கியாக வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டீர்கள்.

★தேர்தல் முழுக்க மதவெறி வெறுப்புப் பிரச்சாரம் செய்த நீங்கள்... "அனைத்து மதங்களையும் சமமாக மதிப்போம்" என்று முதல் நாளே கூறும் நிலமைக்கு வந்து விட்டீர்கள்.

★உங்களின் ஒவ்வொரு செயலிலும் பேச்சிலும் உங்களின் படுதோல்விகள் அப்பட்டமாக வெளியே தெரிந்து கொண்டிருக்கின்றன.

அவற்றை... உங்களாலேயே மறைக்கவும் முடியவில்லை. மறைத்து மகிழ்ச்சியாக நடிக்கவும் முடியவில்லை. இப்படியாக....இன்னும் நிறைய காரணங்களை பட்டியல் இடலாம். இதுவே போதும்... !

இன்னும் பல நாட்கள் கொண்டாட்டத்தில் நாங்கள் ஈடுபட்டுக்கொண்டு இருக்க..! 😊👍👌💐

இப்போதைக்கு ராகுல் சிரிக்கிறார் ..மோடி அழுகிறார்!

முகமது ஆசிக்

Tags :
Advertisement