For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பிஎச்.டி.,படிப்பில் சேர 4 ஆண்டு இளங்கலை பட்டம் போதும்!

06:49 PM Apr 22, 2024 IST | admin
பிஎச் டி  படிப்பில் சேர 4 ஆண்டு இளங்கலை பட்டம் போதும்
Advertisement

ம் நாட்டிலுள்ள எல்லா கல்லூரிகளிலும் உதவி பேராசிரியர் பணியில் சேர, பிஎச்.டி. ஆய்வுப்பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது தேசிய, மாநில தகுதி தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த நிலையில், நான்கு ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் பிஎச்டி படிப்பிற்கு விண்ணப்பிக்கலாமென பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளதால் ஆய்வுப் படிப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

காலேஜ்களில் அசிஸ்டெண்ட் புரொபசர் ஜாப்பில் சேர தகுதியாக பிஎச்.டி., ஆய்வுப்பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது நெட் (தேசிய தகுதி தேர்வு), செட் (மாநில தகுதி தேர்வு) ஆகிய ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால், பிஎச்.டி. ஆய்வுப்படிப்பில் சேர முதுகலை பட்டம் அவசியம். அதேபோல ‘நெட்' தேர்வு எழுதுவதற்கும் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில், 4 ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு இந்த விதிமுறைகளை பல்கலைக்கழக மானியக்குழு தளர்த்தி உள்ளது.

Advertisement

இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், நேரடியாக பிஎச்.டி. படிப்பில் சேரலாம். 'நெட்' தேர்வு எழுதலாம். ஆனால், 4 ஆண்டு படிப்பில் அவர்கள் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். 'கிரேடு' முறையாக இருந்தால், 75 சதவீத மதிப்பெண்களுக்கு சமமான 'கிரேடு' பெற்றிருக்க வேண்டும். 4 ஆண்டு பட்டப்படிப்பில் என்ன பாடம் படித்திருந்தாலும், பிஎச்.டி. படிப்பில் தங்களுக்கு விருப்பமான பாடத்தை எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப் பட்டோர் (கிரீமி லேயர் அல்லாதவர்கள்), மாற்றுத்திறனாளிகள், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினர் ஆகியோருக்கு 5 சதவீத மதிப்பெண் தளர்வு உண்டு’ என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement