For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

வாரத்துக்கு 90 மணி நேர வேலை- சர்ச்சையை கிளப்பிய எல் & டி தலைவர் சுப்ரமண்யம்!

08:41 PM Jan 10, 2025 IST | admin
வாரத்துக்கு 90 மணி நேர வேலை   சர்ச்சையை கிளப்பிய எல்    டி தலைவர் சுப்ரமண்யம்
Advertisement

சில பல வாரங்களுக்கு முன்னர்  இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தி, இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்த கருத்தே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில்,  “வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்” என ஊழியர்களுக்கு அறிவுறுத்திய L & T தலைவரை, பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்,  கோடீசுவரர் ஹரிஷ் கோயங்கா  உள்பட பலர் 'விமர்சித்துள்ளார்.

Advertisement

அதாவது, L&T (லார்சன் அண்ட் டூப்ரோ) நிறுவனதலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் “ஒரு வாரத்துக்கு 90 மணிநேரம் நீங்கள் வேலை செய்தால்தான் இந்திய பொருளாதாரம் வளரும். ஞாயிற்றுக்கிழமைகளிலும் உங்களை என்னால் வேலைக்கு வர வைக்க முடியவில்லை என்பதால் வருத்தமாக உள்ளது. ஞாயிற்றுக் கிழமை வீட்டில் என்ன செய்யப் போகிறீர்கள்? எவ்வளவு நேரம் மனைவியின் முகத்தையே பார்த்துக் கொண்டே இருப்பீர்கள்?நான் ஞாயிறு அன்றும் வேலை செய்கிறேன்” என பேசியிருக்கிறார்.

Advertisement

இவ்வாறு, L&T நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு பலரும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில், அவரது கருத்திற்கு நடிகை தீபிகா படுகோன் கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்.

இதற்கு கடும் விமர்சனத்தை முன்வைத்து தனது இன்ஸ்டா ஸ்டோரியில் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். அவரது பதிவில், “இத்தகைய மூத்த பதவிகளில் இருப்பவர்கள் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவது அதிர்ச்சியளிக்கிறது. அதோடு, Mental Health Matters.” (மனநலம் முக்கியம்) என்ற ஹேஷ்டேக்கை அவர் பதிவிட்டுள்ளார்.

Deepika Padukone
Deepika Padukone [File Image]

இதையடுத்து '‘உங்க வீட்டில் வேலைகளைச் செய்ய ஏழெட்டு வேலைக்காரங்க இருப்பாங்க. நீங்க ஞாயிற்றுக் கிழமையும் வேலை செய்யலாம். மத்தவங்க அப்படியா ?’ 'என்ற ரீதியில்  எக்கச்சக்கமான  கண்டனங்கள் சமூக ஊடகத்தில்  வந்துள்ளன.

அந்த வகையில் 'எல் அண்ட் டி நிறுவன ஊழியர்களின் சராசரி ஆண்டு வருமானம் 9.55 லட்சம் ரூபாய் (2024). ஆனால் சுப்ரமணியம் சம்பளமாகப் பெற்றது 51 கோடி ரூபாய் என்றுமொரு கமெண்ட் தீயாய் பரவுகிறது பத்திரிகை ஒன்று தன் பங்குக்கு செய்தி போட்டு திரியைப் பற்ற வைத்துள்ளது.  ஒருவரின் சராசரி சம்பளத்தைவிட சுப்ரமணியம் சம்பளம் 534  மடங்கு அதிகம். இவ்வளவு ரூபாய் வாங்கும் சுப்பு 90 மணி நேரம் வேலை செய்வதில எந்த தவரும் இல்லை..,ஆனால் ஊழியர் நிலைமை அப்படியா?? என்று கேள்வி கேட்போரின் எண்ணிக்கயும் எகிறிக் கொண்டே போகிறது.

இத்தனைக்கும் நம் நாட்டு தொழிலதிபர் இதுபோன்ற தெளிவற்ற அறிக்கைகளை வெளியிடுவதும், இந்தியாவின் பணியாளர்களிடம் இருந்து உண்மையற்ற கோரிக்கைகள் வைப்பதும் இது முதல் முறை அல்ல. ஆரம்ப பேராவில் சொன்னது போல் , இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என்ஆர் நாராயண மூர்த்தி, நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வாரத்தில் 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று இந்தியர்களிடம் கூறியது சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement