தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

தமிழகத்தில் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை - தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல்!

07:32 PM Apr 04, 2024 IST | admin
Advertisement

“தமிழ்நாட்டில் மொத்தம் 68,321 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை. 181 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. ரோடு ஷோ நிகழ்ச்சிகளை, நடத்த தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். இதில் பிரதமருக்கு சில விதி விலக்கு உள்ளது”என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியுள்ளார்.

Advertisement

மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாஹு சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “திருச்சி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் வீடுகளுக்கேச் சென்று தபால் வாக்குகளை பெறும் பணி தொடங்கி உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் 18-ம் தேதிக்குள் தபால் வாக்குக்களை பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

தபால் வாக்குகளை வாங்க முதல்முறை வீடுகளுக்குச் செல்லும்போது வாக்காளர்கள் வீட்டில் இல்லை என்றால், இரண்டாவது முறை அவர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் செல்வார்கள். இரண்டு முறை மட்டுமே தபால் வாக்கு பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்படும். ‘சுவிதா’ செயலி மூலம் வேட்பாளர்கள் தங்களுக்கு தேவையான பல்வேறு அனுமதிகளைப் பெறலாம். இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.இதுதவிர்த்து மற்ற நிகழ்வுகளுக்கு ஏற்கெனவே உள்ள நடைமுறைதான் பின்பற்றபடுகிறது. தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் அண்டை மாநிலங்களுடன் ஒருங்கிணைத்து செயல்படுவது தொடர்பாக, புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் அறிவுறுத்தினார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே பூத் சிலிப் வழங்கப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படாது. இதுவரை 13.08 லட்சம் பூத் சீலிப் வழங்கப்பட்டுள்ளது. என்று அவர் கூறினார்.

மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திருச்சி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாகளிடம் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகளை வாங்கும் பணி தொடங்கியுள்ளதாக கூறினார்.

அனைத்து மாவட்டங்களிலும் வரும்18ம் தேதிக்குள் தபால் வாக்குக்களை பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் , வாக்காளர்கள் வீட்டில் இல்லை என்றால், இரண்டாவது முறை அவர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் செல்வார்கள் என்றும் சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டும் பூத் சீலிப் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் பூத் சீலிப் வழங்கப்படாது எனவும், இதுவரை 13 புள்ளி 8 லட்சம் பேருக்கு பூத் சீலிப் வழங்கப்பட்டுள்ளதாகவும் சத்ய பிரதா சாகு தெரிவித்தார்.

Tags :
8 thousand 50Chief Electoral Officerpolling boothsSatya Pratha SaguTamil Nadutense
Advertisement
Next Article