தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

மிரட்டலான ஹாரர் திரில்லரான 7G திரைப்படம் ஜூலை 5 ரிலீஸ்!

10:46 AM Jun 23, 2024 IST | admin
Advertisement

Dream House நிறுவனம் சார்பில், இயக்குநர் ஹாருன் தயாரித்து, எழுதி, இயக்க, சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், மாறுபட்ட மிரட்டலான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள 7G திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், ஒரு அதிரடியான போஸ்டர் மூலம் ஜூலை 5 ஆம் தேதி இப்படம் உலகம் முழுதும் வெளியாவதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

ஹாரர் என்றாலே காமெடி என்றாகிவிட்ட தமிழ் சினிமாவின் விதிகளை உடைத்து, ஒரு முழுமையான திரில் அனுபவம் தரும் வகையில், பிளாக் மேஜிக்கை வைத்து, ஒரு ஃபீல் குட் ஹாரர் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஹாருன். புதிதாக தனக்குச் சொந்தமாக புதிய வீட்டை வாங்கி குடியேறும் இளம்பெண் அந்த வீட்டில் சில அமானுஷ்யங்களை உணர்கிறாள், அந்த அமானுஷ்யங்களுக்குப் பின்னால் பிளாக் மேஜிக் இருப்பதை அறியும் அவள், அதன் பின்னால் இருக்கும் உண்மைகளைத் தேட, பல எதிர்பாராத முடிச்சுகள் அவிழ்கின்றன. ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும் வகையில், பரபரவென நகரும் திரைக்கதையுடன், அனைவரும் ரசிக்கும் வகையிலான ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

Advertisement

இப்படத்தின் காட்சிகள், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட், சித்தார்த் விபின், சினேகா குப்தா, சுப்ரமணியம் சிவா, கல்கி ராஜா, ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தினை Dream House நிறுவனம் சார்பில், இயக்குநர் ஹாருன் தயாரித்ததுடன், எழுதி, இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் சித்தார்த் விபின் படத்திற்கு இசையமைக்க, கண்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிஜு V டான் பாஸ்கோ எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார். ஃபயர் கார்த்திக் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், இப்படம் வரும் ஜூலை 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Tags :
7GHaroonSiddharth VipinSmruthi Venkatsonia agarwal
Advertisement
Next Article