இந்திய உளவுத் துறையில் பல்வேறு துறைகளில் 677 காலியிடங்கள்!- குறைந்தபட்ச கல்வி தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி!
மத்திய உள்துறை அமைச்சகத்தில், 10ம் வகுப்பு என்ற குறைந்தபட்ச கல்வித் தகுதியுடன் இந்த ஆண்டின் மிகப்பெரிய ஆள்சேர்க்கை அறிவிக்கையாக இது கருதப்படுகிறது. எனவே, விண்ணப்பதாரர்கள் கடைசி நேரம் வரை காலம் தாழ்த்தாமல், போதிய கால இடைவேளி இருக்கும் போதே இதற்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
பதவி:
security assistant/ motor transport executive (பாதுகாப்பு உதவியாளர்/ மோட்டார் வாகன நிர்வாகி)
காலியிடங்கள் எண்ணிக்கை:
362
தகுதி:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்;
வாகனத்தில் ஏற்படுத்தும் சிறிய அத்தியாவசிய பழுதுகளை சரிசெய்யும் திறன் கொண்டிருக்க வேண்டும்;
இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்;
மேலும், ஓட்டுநர் உரிமம் பெற்ற நாளில் இருந்து, குறைந்தது 12 மாதங்கள் இலகு ரக வானங்கள் ஓட்டியமைக்கான அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
பதவி:
பல்நோக்குப் பணியாளர்
காலியிடங்கள் எண்ணிக்கை: 315
தகுதி:
குறைந்தது 10ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வி பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
பாதுகாப்பு உதவியாளர்/ மோட்டார் வாகன நிர்வாகி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 13.11.2023 அன்று 27-க்கு கீழ் இருக்க வேண்டும்.
பல்நோக்குப் பணியாளர் பதவிக்கு 13.11.2023 அன்று 25க்கு கீழ் இருக்க வேண்டும்.
இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.
தேர்வு முறை:
முதல்நிலை தேர்வு (Tier -I), இரண்டாம் நிலை தேர்வு (Tier -II) ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும். கணினி வழியாக நடத்தப்படும் முதல்நிலை தேர்வு அனைவர்க்கும் பொதுவானதாக இருக்கும். மோட்டார் வாகன நிர்வாகி பதிவுக்கு விண்ணப்பித்தவர்கள் ஓட்டுநர் தகுதித் திறன் (Motor Mechanism & Driving test cum Interview) இரண்டாம் நிலை தேர்வாக எதிர்கொள்வார்கள்.
பல்நோக்குப் பணியாளர் பதவிக்கு, இரண்டாம் நிலை தேர்வு ‘ஆங்கில மொழி விரிவுரை’ (Descriptive Test on English Language and Comprehension) தேர்வாக நடத்தப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
தேர்வு கட்டணம் - ரூ. 50; ஆள்சேர்க்கை சேவை கட்டணம் - ரூ. 450/- ஆகும்.
பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள் ஆகியோர் தேர்வுக் கட்டணம் ரூ. 50 செழுவத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் செய்வது எப்படி?
உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான ஆந்தை வேலைவாய்ப்பு-தளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு ஆள்சேர்க்கை அறிவிக்கையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.