தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

இந்திய தயாரிப்புகளில் 67 மருந்துகள் தரமற்றவை:ஆய்வில் அம்பலம்!

01:30 PM Apr 24, 2024 IST | admin
Advertisement

நம் நாட்டில் மருந்து வணிகம் அதிக லாபம் ஈட்டும் தொழிலாக மாறியுள்ளது. அப்படி மாறியதால் கடும் போட்டியும் நிலவுகிறது.நம் நாட்டில் 1970 ஆம் ஆண்டில் அமலுக்கு வந்த காப்புரிமை சட்டத்தின் விளைவாக ஏராளமான இந்திய முதலாளிகள் மருந்து உற்பத்தி மற்றும் வணிகத்தில் இறங்கினர். நம் நாட்டில் மருந்துகள் வணிகப் பெயர்களில்( BRAND NAME) மட்டுமே வணிகம் செய்யப்படுகின்றது.. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஏராளமான நிறுவனங்கள் மருந்து உற்பத்தி மற்றும் வணிகத்தில் ஈடுபட்டன….அதையொட்டி மருத்துவர்களும் மருந்துகளை அரசு மருத்துவமனை அல்லாத வெளிசந்தையில் வணிகப்பெயர்களிலேயே எழுத துவங்கினர்…இது நம் நாட்டில் தற்போது இருக்கும் நிலை. இந்நிலையில் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அவற்றில் ஒரு மருந்து தவறான வா்த்தக பெயருடன் விற்பனைக்கு இருந்ததும் தெரியவந்துள்ளது. அந்த மருந்துகளில் பெரும்பாலானவை மேற்கு வங்கம், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை.

Advertisement

இந்திய மருந்து சந்தை சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ளது. இதில் சிறு,நடுத்தர பெரிய மருந்து நிறுவனங்கள் தங்கள் மருந்துகளை பிரபலப்படுத்திட மருத்துவ பிரதிநிதிகளை நியமித்து மருத்துவர்களை சந்தித்து விற்பனையை செய்து வருகின்றனர்.. 1990களில் இந்தியாவில் உலகமயம் வந்ததின் விளைவாக போட்டி வெவ்வேறு வடிவங்களில் மாறியது. உலக மயத்தின் விளைவாக அமெரிக்கா போன்ற நாடுகளில் முன்னணி மருத்துவர்களை ஒட்டு மொத்தமாக விலைக்கு வாங்குவது அதன் மூலமாக தங்கள் நிறுவனத்தின் மருந்துகளை பரிந்துரைக்க வைப்பது, அம்மருந்துகளின் பக்க விளைவுகளை மறைப்பது, ஆராய்ச்சி முடிவுகளில் வரும் பாதகமான விவரங்களை கூட வேறு காரணங்களை சொல்லி சாதகமாக்கி கொள்வது போன்ற பல அம்சங்கள் இருக்கிறது என்பதை பல பன்னாட்டு மருத்துவ பத்திரிக்கைகள் அவ்வப்போது அம்பலப்படுத்தும் முன்பே இந்தியாவில் ல் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து - மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Advertisement

அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் 931 மருந்துகளின் மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் வலி, காய்ச்சல், ஜீரண மண்டல பாதிப்பு, சளித் தொற்று, கிருமித் தொற்று, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 67 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Tags :
67 drugsIndian productsstudy reveals!substandard quality
Advertisement
Next Article