தமிழத்தில் 65 கோயில்களுக்கு குடமுழுக்கு கோலாகலம்!!
திருக்கோயில்களின் ஸ்திரத் தன்மைக்கு தொழில் நுட்பம் மட்டுமின்றி மற்றொரு காரணமும் இருக்கிறது. அதாவது ஜீர்ணோத்தாரணம் என்று சொல்லப்படும் சிற்ப ஆகமவிதி. இது திருக்கோயிலின் அங்கங்கள், கலையம்சங்கள் மற்றும் சிற்ப வடிவங்களை சரி செய்யும் முறைகளை எடுத்துரைப்பதாகும். மேலும் ஜீர்ணோத்தாரண முறைப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருக்கோயிலை செப்பனிட்டு புதுப்பித்து அங்கே நிலவும் இறைநிலையின் உயிர்ப்புத் தன்மையை ஒளிரச் செய்யவேண்டும். ஜீர்ணோத்தாரண விதியின்படி திருக்கோயில்களை சீரமைக்கும் பொருட்டு, ஆவர்த்தனம், அனாவர்த்தனம், புனராவர்த்தனம் மற்றும் அந்தரீதம் என்ற நான்கு வகைகளில் ஏதாவது ஒன்றினை பின்பற்றி செயலாற்றுவதில் கவனம் செலுத்துபவர்கள் சிற்பஆகம வல்லுநர்கள்.பழைமையான ஓர் ஆலயம் வலுவிழந்து சிதிலமுற்றிருந்தால் அதனுள்ளிருக்கும் இறைத்திருமேனிகள் பூஜைகள் செய்யப்படாமல் ஒளியிழந்து போகும். அத்தகைய கோயில்களை சீரமைத்து குடமுழுக்கு செய்வித்து பூஜைகள் நடைபெற செய்வது ஆவர்த்தனமாகும். அதுவே புதிதாக ஒரு கோயிலை சிற்பசாஸ்திர இலக்கண முறைப்படி கட்டுவித்து குடமுழுக்கு நடத்துவது அனாவர்த்தன வகையை சார்ந்ததாகும். மேலும் வழிபாட்டில் இருக்கும் திருக்கோயிலை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை முறையாகச் செப்பனிட்டு, உரிய வகையில் புதுப்பித்து மீண்டும் குடமுழுக்கு நடத்துவது புனராவர்த்தனமாகும்.
அப்படியான கும்பாபிஷேகம் என்பது . அது ஆவர்த்தம், அநாவர்த்தம், புனராவர்த்தம், அந்தரிதம் என்ற பொதுவான நான்கு வகைகளில் உள்ளது.
ஆவர்த்தம்
ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகளுக்குக் கும்பாபிஷேகம் செய்யப்படுவது.
அனாவர்த்தம்
பூஜை இல்லாமலும் ஆறு, கடல் இவற்றால் சிதிலமடைந்திருந்தாலும் அக்கோயிலைப் புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது.
புனராவர்த்தம்
கருவறை, பிரகாரம், கோபுரம் முதலியன பழுது பட்டிருந்தால் பாலாலயம் செய்து அவற்றை புதுப்பித்து அஷ்டபந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது.
அந்தரிதம்
கோயில் உள்ளே ஏதேனும் தகாதது நேர்ந்து விடின் அதன் பொருட்டு செய்யப்படும் பரிகார பூஜை.
இந்நிலையில் குடமுழுக்கு நடந்து 66 ஆண்டுகளும், பாலாலயம் செய்யப்பட்டு 36 ஆண்டுகளும் கடந்த நிலையில் பல்வேறு சட்டப்போராட்டங்களை நடத்தி,ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோயில், ரூ.170.11 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவு திட்டத்தின்கீழ் பணிகள் நடந்து வரும் பெரியபாளையம் பவானியம்மன் கோயில், ரூ.1.52 கோடியில் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் (குரு ஸ்தலம்) கோயில், சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் குடமுழுக்கு நடந்த திருச்சி மாவட்டம், பூர்த்தி கோயில் திருமுக்தீஸ்வரர் கோயில் உள்ளிட்ட 65 கோயில்களுக்கு குடமுழுக்கு இன்று நடைபெற்றது.
குடமுழுக்கு நடைபெறும் கோயில்களில் சேத்துப்பட்டு கருகாத்தம்மன், சேலம் மாவட்டம், கிருஷ்ணாநகர், சீதாராமச்சந்திர மூர்த்தி கோயில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, நாட்டுச்சாலை, அமிர்தகடேஸ்வரர் கோயில், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், மொனசந்தை, கரியமாணிக்கப் பெருமாள், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, ஞாயிறு, புஷ்பரதீஸ்வரர் கோயில்,கன்னியாகுமரி மாவட்ட தேவஸ்தான கட்டுப்பாட்டிலுள்ள 7 கோயில்கள், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், முத்துமாரியம்மன், ராணிப்பேட்டை மாவட்டம், சேந்தமங்கலம் சுந்தர விநாயகர் ஆகிய கோயில்களும் அடங்கும். குடமுழுக்கை முன்னிட்டு அதிகாலையிலேயே லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில்களில் குவிந்தனர். சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட புனித நீர் மந்திரங்கள் முழங்க கலசங்களில் ஊற்றப்பட்டன. கலசங்களில் ஊற்றப்பட்ட புனித நீர், பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டனர்.