For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

முதல்வரின் பாதுகாப்புக்காக கருப்பு நிறத்தில் 6 புதிய வாகனங்கள்! ஏன்? என்ன சிறப்பு?

08:24 PM Jan 01, 2024 IST | admin
முதல்வரின் பாதுகாப்புக்காக கருப்பு நிறத்தில் 6 புதிய வாகனங்கள்  ஏன்  என்ன சிறப்பு
Advertisement

முதல்வர் ஸ்டாலின் பாதுகாப்புக்காக கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய கருப்பு இன்னோவா கார்கள் வாங்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாகனங்கள் ஏற்கெனவே வெள்ளை நிறத்தில் இருந்த நிலையில் தற்போது 6 கருப்பு நிற இன்னோவா கார்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த புதிய வாகனங்களில் முதல்வர் ஸ்டாலினின் பாதுகாப்புக்காக கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன.

Advertisement

மேலும் டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா கார் என்பது அரசியல்வாதிகள் உட்பட அரசு அதிகாரிகள் என பலரும் பயணம் செய்ய ஏற்ற காராக இருக்கிறது. ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் சொகுசாக பயணம் செய்யலாம். அதிக பொருட்களை எடுத்துச் செல்லலாம் என்பதால் இந்த காரை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் தான் தமிழக முதல்வருக்கு பாதுகாப்பு வழங்கும் பாதுகாப்பு படையினருக்கும் இந்த கார் வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது..!

Advertisement

முதல்வரின் புதிய கருப்பு நிற பாதுகாப்பு கார்களில் 3 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. காரின் மேல் பகுதியில் இருந்து அனைத்து நிகழ்வுகளையும் படமாக்கும் வகையில் இந்த கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இதனால் முதல்வர் எங்கு பயணம் செய்தாலும் அவர்கள் பயணம் செய்யும் பாதையை முழுமையாக அந்த கேமராக்கள் பதிவு செய்து கொண்டே வரும் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அந்த கேமராக்கள் மூலம் பிரச்சனை செய்த நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும் என்பதால் இந்த கேமராக்களை பொருத்தியுள்ளனர்.மேலும் முதல்வர் ஸ்டாலின் வெளியே செல்லும் போது, பாதுகாப்பு வீரர்கள் வெளியில் இருந்தவாறே கார்களில் நிற்கும் வகையில் இந்த கார்கள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த கார்களில் ஒன்றில் ஜாமர் கருவிகள் இருக்கிறது. முதல்வர் பயணத்தின் போது எப்பொழுது வேண்டுமானாலும் ரிமோட் மூலம் எடுக்கக்கூடிய வெடிகுண்டு பொருத்தப்பட்டு ஆப்பரேட் செய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதால் இந்த ஜாமர்கள் மிக முக்கிய பங்கு வைக்கின்றன. இந்த ஜாமர்களை பாதுகாப்பு படை வீரர்கள் ஆன் செய்து விட்டால் அருகில் உள்ள எந்த ஒரு வயர்லெஸ் மூலமாக சிக்னல்களும் செயல்படாமல் தடுக்கப்பட்டு விடும்.

நகர் பகுதியில் முதல்வர் பயணிக்கும் போது கார் மெதுவாக பயணிக்கும் அப்பொழுது எப்பொழுது வேண்டுமானாலும் மக்கள் குறுக்கே வரலாம் அல்லது முதல்வரை நெருக்கலாம் என்ற சூழ்நிலை இருக்கும் போது எப்பொழுதும் பாதுகாப்பு படை வீரர்கள் உடனடியாக முதல்வர் அருகே சென்று பாதுகாப்பு வழங்க வேண்டிய சூழ்நிலையில் அவர்கள் காரில் வெளியில் தொங்கியபடியே பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கும். அப்படியாக பயணம் செய்வதற்கு இந்த 6 கார்களிலும் வெளிப்புறத்தில் படிக்கட்டுகள் மற்றும் அவர்கள் பிடித்து செல்வதற்கு மேலே ரூஃப் ரெயில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இந்த கார் சற்று மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒரே நேரத்தில் எத்தனை படை வீரர்கள் வேண்டுமானாலும் காருக்குள் இல்லாமல் காரில் வெளியில் தொங்கியபடியே பயணம் செய்ய முடியும்.

அதே சமயம் முதல்வர் ஸ்டாலினுக்கு இந்த ஆண்டு கருப்பு நிறம் சிறந்தாக இருக்கும் என ஜோதிடர்கள் கூறியுள்ளதால் இம்மாற்றம் என்றும் ஒரு  தகவல் வெளியாகியுள்ளது.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement