தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

இந்தியன் ரயில்வேயில் 5,696 அசிஸ்டண்ட் லோகோ பைலட் பணி வாய்ப்பு!

01:37 PM Jan 20, 2024 IST | admin
Advertisement

ந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,696 அசிஸ்டண்ட் லோகோ பைலட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

Advertisement

ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRB), இந்திய அரசின் ரயில்வே அமைச்சகம், உதவி லோகோ பைலட் (Assistant Loco Pilot - ALP) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது.

Advertisement

இந்திய ரயில்வேயின் 21 மண்டலங்களின் கீழ் சுமார் 5,695 காலியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்பிட தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் உதவி லோகோ பைலட் பணியிடங்கள் 2024-ம் ஆண்டுக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறைகள் இன்று முதல் தொடங்க உள்ளது. இன்று முதலே தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 19-ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கான கல்வித் தகுதியாக ஐடிஐ, டிப்ளமோ, பி.இ. பி.டெக் ஆகியவை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

விண்ணப்ப கட்டணம்: ரூ.500 ஆகும்.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்கள் இந்தியா முழுவதும் எங்கெங்கு இந்த பணியிடம் காலியாக உள்ளதோ அங்கு பணிநியமனம் செய்யப்படுவார்கள்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆந்தை வழிகாட்டி / வேலைவாய்ப்பு லிங்கைக் கிளிக் செய்து வரும் இணையதளப் பக்கத்தை அணுகலாம்.

Tags :
5696Indian Railwaysjobsrecruitment Assistant Loco Pilot
Advertisement
Next Article