தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

லாரி ஓட்டுநர்களில் 55.1% பார்வை குறைபாடு!

01:46 PM Jan 29, 2025 IST | admin
Advertisement

ம் நாட்டில்தான் தினமும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏராளமான கனரக வாகனங்கள் பயணிக்கின்றன. இந்த வாகனங்களில்தான் இந்தியாவில் சரக்குகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்கிறது. இதனால் தான் இந்தியப் பொருளாதாரம் தொய்வில்லாமல் வளர்ந்து வருகிறது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைகளில் நேரும் விபத்துக்களில் அதிகமாக இப்படியான லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களில் ஈடுபாடு அதிகமாக இருக்கிறது.சாலையில் கனரக வாகனங்கள் தான் அதிகமாகச் செல்கிறது. இதனால் அந்த வாகனங்கள் தான் விபத்தில் அதிகமாகச் சிக்கும் என்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் இப்படியாகக் கனரக வாகனங்களில் டிரைவர்களை கவனித்தால் அவர்கள் பெரும்பாலும் கண்ணாடி அணியாதவர்களாக இருக்கிறார்கள். உலகம் முழுக்கக் கண்ணாடி அணிய வேண்டியதன் தேவை பலருக்கு இருக்கிறது. ஆனால் டிரக் டிரைவர்கள் அநேகமாக கண்ணாடி அணியாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுகிறது.

Advertisement

இந்நிலையில் டெல்லி ஐஐடி நிறுவனம் நடத்திய ஆய்வில், 53.3 சதவீதம் பேருக்கு தூரப்பார்வை பிரச்சினை இருப்பதாகவும், 46.7 சதவீதம் பேருக்கு கிட்டப் பார்வை பிரச்சினை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதேபோல 44.3 விழுக்காடு ஓட்டுநர்களின் உடல் எடை அதிகமாக இருகிறது. 57.4 விழுக்காடு பேருக்கு அதிக ரத்த அழுத்தம் இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த லாரி ஓட்டுநர்களிடம் இந்த ஆய்வு அறிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
BPdriverseye visionfathealthlorrytruck
Advertisement
Next Article