தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் உதயம்- மோடி அரசு அறிவிப்பு!

06:35 PM Aug 26, 2024 IST | admin
Advertisement

டாக் இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக இருசக்கர வாகனத்தில் நெடுந்தூரம் பயணிக்கும் பைக்கர்ஸின் சொர்க்கமாக லடாக் அறியப்படுகிறது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பைக்கர்ஸ் லடாக் வருகின்றனர். உலகின் மிக உயரமான சாலையில் பயணிக்க வேண்டும் என்ற உணர்வைப் பெறவே அவர்கள் அந்தப் பயணத்தை மேற்கொள்கின்றனர். லடாக் நாட்டின் பாதுகாப்பு ரீதியாகவும் மிக முக்கியமான பகுதியாகத் திகழ்கிறது. அண்மையில் லடாக்கின் கிழக்குப் பகுதியில் சீன ராணுவம் சில ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டது. அதனால் இந்தப் பகுதி மிக முக்கியமான பகுதியாக இருக்கிறது. இச்சூழலில் லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக வரும் தகவல் கவனம் பெறுகிறது.ஆம்.. ஜம்மு-காஷ்மீரில் இருந்து தனியே பிரிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தில் 5 புதிய மாவட்டங்களை உருவாக்கியுள்ளது மத்திய அரசு.

Advertisement

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்து, 2019ல் அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இதனால் ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று லடாக்கின் 5 புதிய மாவட்டங்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். அதில் "லடாக் மக்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை உருவாக்க மோடி அரசு உறுதிபூண்டுள்ளது. இன்று லடாக்கில் புதியதாக 5 மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. புதிய மாவட்டங்களான ஸன்ஸ்கார், ட்ராஸ், ஷாம், நுப்ரா மற்றும் சாங்தாங், ஒவ்வொரு மூலை முடுக்கிலும் நிர்வாகத்தை மேம்படுத்தும். இதன் மூலம் மக்கள் நலத்திட்டங்கள், மக்களின் வீட்டு வாசல்களிலேயே கொண்டு சேர்க்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்

Advertisement

இந்த அறிவிப்பை பாராட்டியுள்ள பிரதமர் மோடி, "லடாக்கில் ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்குவது சிறந்த நிர்வாகம் மற்றும் வளர்ச்சிக்கான முக்கியமான ஒரு படியாகும். சேவைகள் மற்றும் வாய்ப்புகளை மக்களுக்கு இன்னும் நெருக்கமாக கொண்டு வர ஜான்ஸ்கர், டிராஸ், ஷாம், நுப்ரா மற்றும் சாங்தாங் ஆகியவை இப்போது அதிக கவனம் செலுத்தும். அங்குள்ள மக்களுக்கு வாழ்த்துகள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
5 new districtsannouncementemergeLadakhModi Governmentபுது மாவட்டங்கள்லடாக்
Advertisement
Next Article