இந்திய சந்தையில் ரெட்மி 13 5ஜி போன் உள்பட 5 அறிமுகங்கள்.!
சீனாவைச் சேர்ந்த ஷாவ்மீ நிறுவனம் இந்திய சந்தைக்கு வந்து 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஷாவ்மீ மற்றும் ரெட்மி பிராண்டுகளின் கீழ் மொத்தம் 5 புதிய தயாரிப்புகள் அறிமுகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவைகள் ரெட்மியின் புதிய பட்ஜெட் போன் ஆன ரெட்மி 13 5ஜி, வயர்லெஸ் இயர்போன்ஸ் ஆன ரெட்மி பட்ஸ் 5சி, ஷாவ்மீயின் ரோபோ வாக்யூம் கிளீனரின் மேம்படுத்தப்பட்ட எக்ஸ்10 எடிஷன் மற்றும் 2 புதிய ஷாவ்மீ பவர் பேங்க்குகள் ஆகும்.
6.79 இன்ச் ஃபுள் ஹெச்டி டிஸ்பிளே
ஸ்னாப்டிராகன் 4 ஜெனரேஷன் 2 ப்ராசஸர்
ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
இரண்டு முறை இயங்குதள அப்டேட்
108 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்கத்தில் இடம்பெற்றுள்ள பிரதான கேமரா
13 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
6ஜிபி/8ஜிபி ரேம்
128ஜிபி ஸ்டோரேஜ்
5,030mAh பேட்டரி
33 வாட்ஸ் திறன் கொண்ட சார்ஜர் போனுடன் கிடைக்கிறது
யுஎஸ்பி டைப்-சி போர்ட்
மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
வரும் 12-ம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது
இதன் விலை ரூ.13,999. விலையில் அறிமுகம் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது
ரெட்மி பட்ஸ் 5சி (Redmi Buds 5C):
இந்த புதிய ரெட்மி வயர்லெஸ் இயர்பட்கள் 40dB ஆக்டிவ் நோஸ் கேன்சலேஷனை (ANC) வழங்குகின்றன. மேலும் இது 12.4மிமீ டைனமிக் டைட்டானியம் டிரைவர்கள் மற்றும் AI ENC உடன் குவாட்-மைக் அமைப்பை கொண்டுள்ளன. கேஸ் மூலம் 36 மணிநேரமும், இயர்பட்களுடன் 7 மணிநேரம் வரையிலான பிளேடைம் கிடைக்கும். ப்ளூடூத் 5.3 உடன் வரும் இது ரூ.1,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஷாவ்மீயின் 2 புதிய பவர் பேங்குகள்:
ஷாகிமீ தனது போர்ட்ஃபோலியோவில் 2 புதிய பவர் பேங்க்களையும் சேர்த்துள்ளது. அவற்றில் ஒன்று ஷாவ்மீ பாக்கெட் பவர் பேங்க் (Xiaomi Pocket Power Bank) ஆகும். இது 10,000mAh திறன் கொண்டது. இதில் பில்ட்-இன் டைப்-சி கேபிள் பொருத்தப்பட்டுள்ளது, இது மல்டி-போர்ட் அணுகல் மற்றும் டூ-வே பாஸ்ட் சார்ஜிங் திறன்களையும் கொண்டுள்ளது
மற்றொன்று ஷாவ்மீ பவர் பேங்க் 4ஐ (Xiaomi Power Bank 4i) மாடல் ஆகும். ஒரே நேரத்தில் மூன்று சாதனங்களை சார்ஜ் செய்யும் திறன் கொண்ட இது 10,000mAh லித்தியம்-அயன் பேட்டரியை கொண்டுள்ளது. இதுவும் டூ-வே பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. மேலும் இவ்விரு பவர் பேங்க்களும் 12-லேயர் பாதுகாப்பு அமைப்புடன் வருகின்றன மற்றும் 22.5W ஃபாஸ்ட் சார்ஜிங், பவர் டெலிவரி மற்றும் குயிக் சார்ஜ் 3.0 தொழில்நுட்பங்களை ஆதரிக்கின்றன. முதல் மாடலின் விலை ரூ.1,699; இரண்டாவது மாடலின் விலை ரூ.1,299 ஆகும்.
ஷாவ்மீ ரோபோ வாக்யூம் கிளீனர் எக்ஸ்10:
இது டூபாய்ல ஆட்டோ-எம்ப்டியிங் வெசல்ஸ்களுடன் கூடிய குவிக்க டஸ்ட் கலெக்ஷன், 2.5 லிட்டர் ஹை கெப்பாசிட்டி டிஸ்போஸபிள் பேக், LDS லேசர் நேவிகேஷன் வழியிலான துப்புரவு கவரேஜிற்கான துல்லியமான மேப்பிங், 4000Pa உறிஞ்சும் சக்தி, 5200mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. இதன் விலை ரூ.29,999 ஆகும்.