திருப்பதி அன்னதான நன்கொடை 5 லட்சம் அதிகரிப்பு - முழு விபரம்!
திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பட்ட பின்னர், 1983-ல் முதல்வர் என்.டி. ராமா ராவ் ஆட்சி காலத்தில்தான் ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் கட்டப்பட்டது. இலவச அன்னதானம் ஸ்ரீவெங்கடேஸ்வரா அன்னதான திட்டமாக செயல்பட தொடங்கியது. பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை பணத்தை அரசு வங்கிகளில் டெபாசிட் செய்து, அதன் மூலம் வரும் வட்டி பணத்தில் அன்னபிரசாத திட்டம் செயல்பட வேண்டுமென திட்டம் வகுக்கப்பட்டது.
அதை அடுத்து ஏழுமலையான் சாமி தரிசனம் முடித்து, 'மகா துவாரம்' வழியாக வெளியே வந்து திரும்பியதும், பக்தர்கள் தேடிப்போகும் இடம் அன்னதானக் கூடம்தான். 'மாத்ருஶ்ரீ வெங்கமாம்பாள்' எனும் பெயரில் இயங்கும் இந்த அன்னதானக்கூடத்தில் ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பேர் வரை உணவருந்தலாம். பசியோடு வரும் பக்தர்களுக்கு சாதம், சாம்பார், ரசம், மோர், பொரியல் மற்றும் துவையலுடன் உணவு வழங்குகிறார்கள். தேவையான அளவு சாப்பிடலாம். 1985 - ம் ஆண்டு 2,000 பேர் சாப்பிடும் அளவில் தொடங்கப்பட்ட இந்த அன்னதானம் இன்று நாளொன்றுக்கு 60 ஆயிரம் பேர் வரை சாப்பிடும் அளவில் விரிவாக்கம் பெற்றுள்ளது. 'தானத்தில் சிறந்தது அன்னதானம்' என்பதால், பக்தர்கள் இந்தத் திட்டத்தில் ஆர்வமுடன் பங்களிப்புச் செய்கிறார்கள். உணவுத் தயாரிப்புக்காக நாள் ஒன்றுக்கு 26 லட்ச ரூபாய் செலவாகின்றது. திருமலை திருப்பதி தேவஸ்தானம், அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள், காய்கறிகள் ஆகியவற்றை வாங்கியளிக்கிறது. பக்தர்கள் பலரும் அன்னதான சேவைக்குப் பணமாகவும், பொருளாகவும், காய்கறிகளாகவும் வழங்கி வருகின்றனர்.மேலும் வரிசையில் தரிசனத்துக்காக காத்திருக்கும் பக்தர்கள், பஸ் நிலையம், மாதவம், ஸ்ரீநிவாசம், விஷ்ணு நிவாசம் பக்தர்கள் தங்கும் விடுதிகள், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் என பல்வேறு இடங்களில் இலவச அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக நன்கொடை வழங்குவோர் இதுவரை ஒரு நாளைக்கு ரூ.33 லட்சம் வழங்கி வந்தனர். இந்நிலையில், விலைவாசி உயர்வால் அன்னதான நன்கொடை ரூ.38 லட்சமாக உயர்த்தப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று அறிவித்துள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னப் பிரசாத நன்கொடை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.திருமலையில் மட்டுமில்லாமல் திருச்சானுர் பத்மாவதி தாயார் சந்நிதியிலும் இதேபோல மூன்றுவேளையும் அன்னதானம் வழங்கப்படுகின்றது. 'அன்னப்பிரசாத அறக்கட்டளை' நன்கொடை வழங்கும் வாய்ப்பை பொதுமக்களுக்கும் வழங்குகின்றது. காலைச் சிற்றுண்டிக்கு 6 லட்சம் ரூபாய், மதிய உணவு மற்றும் இரவு உணவுக்கு தலா 10 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நன்கொடையை, தனிநபராகவோ, நிறுவனத்தின் சார்பாகவோ, அறக்கட்டளையின் சார்பாகவோ வழங்கலாம். வழக்கமாக நன்கொடையாளர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் மற்றும் சலுகைகள் இதற்கும் பொருந்தும். இதற்கு ஏராளமான பக்தர்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் தினமும் திருமலையில் சுமார் 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பக்தர்கள் இலவசமாக உணவு உண்டு வருகின்றனர்.
மேலும் வரிசையில் தரிசனத்துக்காக காத்திருக்கும் பக்தர்கள், பஸ் நிலையம், மாதவம், ஸ்ரீநிவாசம், விஷ்ணு நிவாசம் பக்தர்கள் தங்கும் விடுதிகள், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் என பல்வேறு இடங்களில் இலவச அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக நன்கொடை வழங்குவோர் இதுவரை ஒரு நாளைக்கு ரூ.33 லட்சம் வழங்கி வந்தனர். இந்நிலையில், விலைவாசி உயர்வால் அன்னதான நன்கொடை ரூ.38 லட்சமாக உயர்த்தப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று அறிவித்துள்ளது. இதன் மூலம் சிற்றுண்டிக்காக ரூ.8 லட்சம் மற்றும் மதிய மற்றும் இரவு உணவுக்காக தலா ரூ.15 லட்சம் வீதம் மொத்தம் ரூ.38 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நன்கொடை வழங்க விரும்பும் பக்தர்கள் ஒவ்வொரு வேளைக்கும் தனித்தனியாகவும் நன்கொடை வழங்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. அன்னப் பிரசாத திட்டத்துக்கு தினமும் 14 முதல் 16.5 டன் அரிசியும், 6.5 முதல் 7.5 டன் காய்கறிகளும் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தகவல்கள் பெற விரும்புபவர்கள்,
The Secretary & Deputy Executive Officer,
(S.V. Anna PrasadamTrust)
T.T.D. Administrative Building,
K.T.Road, Tirupati-517 501. Andhra Pradesh /
Phone: 0877 – 2264375, 2264237
Website: www.tirumala.org;
e-mail: svannadanamtrust@tirumala.org
தி.தி.தேவஸ்தான நிர்வாகக் கட்டடம், கபிலத்தீர்த்தம் சாலை, திருப்பதி என்ற முகவரியிலோ, 0877-2264258, 2264375, 2264237 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.
அன்னதானம் தவிர, திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு சமூக நலச் செயல்களையும் செய்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக ஆதரவற்ற சிறுவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கத்துடன் வேங்கடேஸ்வர பால மந்திரம் திட்ட அறக்கட்டளையை நிறுவியது.
இதனுடன் வேங்கடேஸ்வரா ஜல நிதி திட்டம், வேங்கடேஸ்வரா தகவல் தொழில்நுட்ப அறக்கட்டளை ஆகியவற்றை இணைத்து 'வேங்கடேஸ்வரா சர்வஸ்ரேய்ஸ்சு அறக்கட்டளை' உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றின் வாயிலாக ஆதரவற்ற சிறுவர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மனவளம் குன்றியவர்களின் காப்பகங்கள், மையங்கள் அமைத்தல், அவர்களின் பராமரிப்புக்கு நிதி வழங்குதல் போன்ற சேவைகளைச் செய்து வருகின்றது.
இந்த நலத்திட்டங்களுக்குக் குறைந்தபட்ச நன்கொடையாக 1,000 ரூபாய் பெறப்படுகின்றது. இவ்வாறு பெறப்படும் நன்கொடைகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வட்டியில், இந்தத் திட்டங்களுக்கு நிதி உதவிகள் செய்யப்படும்.
இந்தத் திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்க விரும்புபவர்கள்,
The Executive Officer, Sri Venkateshwara Sarva Sreyas Trust,
TTD, Tirupati-517501. வேங்கடேஸ்வரா சர்வஸ்ரேய்ஸ்சு அறக்கட்டளை, தி.தி.தேஸ்தானம், திருப்பதி எனும் பெயரில் காசோலையாகவோ (செக்), வரைவோலையாகவோ (டிராஃப்ட்) எடுத்து, The Executive Officer, Sri Venkateshwara Sarva Sreyas Trust, TTD, Tirupati-517501. எனும் முகவரிக்கு அனுப்பலாம். ஆயிரம் ரூபாய்க்குக் குறைவான நன்கொடைகள் திருமலை உண்டியலில் சேர்க்கப்படும்.