For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சவூதி அரேபியாவில் 4 ஆயிரம் ஆண்டு பழமையான நகரம் கண்டுபிடிப்பு!

09:22 PM Nov 04, 2024 IST | admin
சவூதி அரேபியாவில் 4 ஆயிரம் ஆண்டு பழமையான நகரம் கண்டுபிடிப்பு
Advertisement

டமேற்கு சவூதி அரேபியாவில் பழமையான கோட்டை நகரத்தின் எச்சங்கள், பிரெஞ்சு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் குய்லூம் சார்லக்ஸ் மற்றும் அவரது குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 14.5 கிலோமீட்டருக்கு சுவர் இருந்தது.அல்-நதாஹ் என்று அழைக்கப்படும் இடம், வறண்ட பாலைவனத்தால் சூழப்பட்ட பசுமையான பகுதியில் நீண்ட காலமாக மறைந்து இருந்ததாக தெரிவித்தனர்.

Advertisement

இது குறித்து பேசிய ஆராய்ச்சியாளர்கள், "இந்த நகரம் ஆரம்பகால வெண்கல யுகத்தின் கிமு 2400-க்கு முந்தையது. இந்நகரத்தில் 500 பேர் வரை வாழ்ந்திருக்கலாம். இந்த முக்கியமான கண்டுபிடிப்பு பண்டைய மக்கள் நாடோடிகளிலிருந்து நகர்ப்புற வாழ்க்கை முறைக்கு எவ்வாறு மாறியது என்பதை எடுத்துக்காட்டுகிறது.இது பிராந்தியத்தின் வரலாற்று நிலப்பரப்பில் அதன் முக்கியத்துவத்தை வெளிகாட்டுகிறது. அக்கால சமூக மற்றும் கட்டிடக்கலை வளர்ச்சிகள் பற்றிய நமது புரிதலை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், அரேபிய தீபகற்பத்தின் இந்த பகுதியில் நகரமயமாக்கலை நோக்கிய முக்கிய மாற்றத்தை வலியுறுத்துகிறது.

Advertisement

குடியிருப்புகள் ஒரு நிலையான திட்டத்தைப் பின்பற்றி கட்டப்பட்டன மற்றும் சிறிய தெருக்களால் இணைக்கப்பட்டன.வெண்கல யுகத்தில் வடமேற்கு அரேபியாவில் பெரும்பாலும் ஆயர் நாடோடி குழுக்கள் ஆதிக்கம் செலுத்தினர். நீண்ட தூர வர்த்தகத்துக்காக ஒருங்கிணைக்கப்பட்ட சிறிய கோட்டைகளை மையமாகக் கொண்டு ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நினைவுச் சின்ன சுவர் அங்கு உள்ளன" என்று தெரிவித்தனர்.

Tags :
Advertisement