For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

820 கோடி மக்கள் தொகையில் 4.3 % பேர்களே ஆரோக்கியம்:ஆய்வு முடிவு!

01:56 PM Sep 14, 2024 IST | admin
820 கோடி மக்கள் தொகையில் 4 3   பேர்களே ஆரோக்கியம் ஆய்வு முடிவு
Advertisement

வ்வொரு மனிதனின் நீண்ட ஆரோக்கியம் மற்றும் ஆயுட்காலத்தை அவர்களின் உடல், மனம் மற்றும் சமூக நல் வாழ்வுதான் உறுதி செய்கிறது. இதில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டாலும் மற்ற இரண்டும் அதனைத் தொடர்ந்து தானாகவே பாதிக்கப்பட்டு விடும். ஆகையால், நாம் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்திவிட்டு மனம் மற்றும் சமூக ரீதியான ஆரோக்கியத்தையோ, அல்லது மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி விட்டு உடல் மற்றும் சமூக ரீதியான ஆரோக்கியத்திலோ கவனம் செலுத்தி எந்தவித பயனும் இல்லை என்றே கூறலாம். மூன்று நலன்களையும் சரிசமமாக எடுத்துச் செல்லும் வாழ்வியல் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பதுதான் இங்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.

Advertisement

இந்நிலையில் கடந்த 1990 முதல் 2013ம் ஆண்டு வரை 188 நாடுகளில் உடல்நலக்குறைவு தொடர்பாக ' குளோபல் பர்டன் ஆப் டிசீஸ்' என்ற அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. அதனை அடிப்படையாக வைத்து ஆய்வு கட்டுரை ஒன்று 'லான்செட்' இதழில் வெளியாகி உள்ளது.

Advertisement

அதில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் இதோ:

உலகில் 820 கோடி மக்கள் வசிக்கும் நிலையில், 4.3 சதவீதம் பேர் மட்டுமே நலமுடன் உள்ளனர். மற்றவர்கள் ஏதாவது ஒரு நோயினால் அவதிப்பட்டு வுருகின்றனர். சமீபத்தில் ஏற்பட்ட கோவிட் பெருந்தொற்று இந்த எண்ணிக்கையை அதிகரித்து இருக்கும்.

பெரும்பாலான மக்கள் முதுகு வலி, மன அழுத்தம், ரத்த சோகை, தொண்டை புண், வயது முதிர்வால் காது கேளாமை ஆகியவற்றால் அவதிப்படுகின்றனர்.

50 சதவீத மக்கள் தசை தொடர்பான பிரச்னைகள், மனநலம், போதைப்பொருள் பயன்பாடு தொடர்பானவற்றால் அவதிப்படுகின்றனர்- இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

கடந்த 2013ம் ஆண்டில், இந்த அமைப்பு உலகளவில் நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எச்சரித்து இருந்தது. இதன்படி கடந்த 10 ஆண்டில் நீரிழிவால் 53 கோடி பேர் அவதிப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

ஆக இன்றைய உலகில் மருத்துவ அறிவியலை காட்டிலும் புதிய நோய்கள் மிக வேகமாக உருவாகி ஆரோக்கியத்திற்கு பெரிய சவாலாக உள்ளது என்பது தெளிவாகிறது இல்லையா?.

Tags :
Advertisement