ஐகோர்ட்டில் டெலிபோன் ஆபரேட்டர், ஜெராக்ஸ் மெஷின் ஆப்ரேட்டர் உள்ளிட்ட 33 பணியிட வாய்ப்பு!.
சென்னை ஐகோர்ட்டில் தற்போது டைப்பிஸ்ட், டெலிபோன் ஆபரேட்டர், கேஷியர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் உள்ளிட்ட பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 33 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களுக்குக் குறைந்தபட்ச கல்வித் தகுதி இளநிலை டிகிரி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசுப் பணியிடங்களுக்காகத் தயாராகிக் கொண்டிருக்கும் தேர்வர்கள் இப்பணியிடங்களுக்கு இன்று முதல் 13.02.2024 தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், டைப்பிஸ்ட் பணிக்கு 22 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். டிகிரியுடன் தமிழ், ஆங்கிலத்தில் டைப்ரைட்டிங் ஹையர் முடித்திருக்க வேண்டும். அதோடு ஆபீஸ் ஆட்டோமேஷன் கம்ப்யூட்டர் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஒருவேளை ஆபீஸ் ஆட்டோமேஷன் கம்ப்யூட்டர் படிப்பை முடிக்காதவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் பயிற்சி காலத்தில் அதனை முடிக்க வேண்டும். மாதச்சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரையும், கூடுதலாக சிறப்பு ஊதிய வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், டெலிபோன் ஆபரேட்டர் பணிக்கு ஒருவரும், கேஷியர் பணிக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கும் மாதச்சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரையும், கூடுதலாக சிறப்பு ஊதிய வழங்கப்படும்.
ஜெராக்ஸ் ஆபரேட்டர் பணிக்கு மொத்தம் 8 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்குத் தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.16,600 முதல் அதிகபட்சமாக ரூ.60,800 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகள் அனைத்திற்கும் விண்ணப்பிப்போர் 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலின மக்கள் மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 37 வயது வரை தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னை உயர் நீதிமன்ற கிளையில் பணியில் இருப்போருக்கு 47 வயதுக்குள்ளும், முன்னாள் படை வீரர்கள் என்றால் 55 வயது வயதுக்குள்ளும் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரை தளர்வு என்பது வழங்கப்படும்.
தகுதியுடைய தேர்வர்கள் ஆந்தை வழிகாட்டி/ வேலைவாய்ப்பு என்ற லிங்க்-கை கிளிக் செய்து வரும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்கான கட்டணமாக ரூ.50 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பட்டியல் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேர்வுக் கட்டணம் இல்லை. எழுத்துத் தேர்வு, திறனறி தேர்வு மூலம் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.