இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பத்திரிகையாளர் 31 பேர் கொலை - பல ரிப்போர்ட்டர்ஸ் மிஸ்ஸிங்!
ஐ.நா. கேட்டுக் கொண்டும் தொடரும் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்த முந்தைய 4 போர்களை விட இந்தப் போரால் அதிக உயிரிழப்புகள் மற்றும் கடுமையான மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 31 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர் 9 பேர் காணாமலோ அல்லது சிறைபிடிக்கப்பட்டோ உள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கு இடையேயான ரத்தப் போர் ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. மனிதாபிமான அடிப்படையில் காசா போரை நிறுத்துமாறு ஐ.நா. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால் இஸ்ரேல் அதை முற்றிலுமாக நிராகரித்ததுடன், ஹமாஸ் முற்றிலுமாக ஒழிக்கப்படும் வரை ஓயப்போவதில்லை என்று சபதம் செய்து போரைத் தொடர்ந்தது. ஆரம்பத்தில் வான் மற்றும் கடல் மார்க்கமாக காஸா மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய இஸ்ரேலிய இராணுவம், கடந்த சில நாட்களாக காஸாவில் தரைவழியாக தனது தாக்குதலை விரிவுபடுத்தி வருகிறது.
வடக்கு காஸாவில் தரைவழித் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு இஸ்ரேல் ராணுவத்தை ஹமாஸ் அமைப்பினர் எதிர்கொள்வதாகவும், தெருக்களில் இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இஸ்ரேலிய இராணுவத்தின் இடைவிடாத குண்டுவீச்சு காரணமாக குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஏற்கனவே தரைமட்டமாகிவிட்டன, மேலும் தரைவழி தாக்குதல் அங்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துகிறது. இ ந்நிலையில், காஸாவில் உள்ள 13 மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளை வெளியேற்ற இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளதாக பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால், ஆக்சிஜன் பிரச்னையில் மருத்துவமனைகள் குறிவைக்கப்படும் அபாயம் உள்ளது.
இப்போரால் . செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் முதல் அப்பாவி குழந்தைகள் வரை இந்தக் கொடூரத் தாக்குதலில் பலியாகி வருகின்றனர். ,அதாவது கடந்ர்க 3 வாரங்களுக்கு மேல் நீடிக்கும் இந்த போரில் காஸாவில் மட்டும் இதுவரை 8,500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது வேதனையளிக்கிறது. 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சுமார் 2,000 பேர் இடிபாடுகளுக்குள் புதைந்து காணாமல் போயுள்ளனர்.
அதிலும் கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் - இஸ்ரேல் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 31 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர் என 'தி டைம்ஸ் ஆப் இஸ்ரேல்' என்ற ஆன்லைன் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதை பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு (The Committee to Protect Journalists) உறுதி செய்துள்ளது. இந்த 31 பத்திரிகையாளர்களில் 26 பாலஸ்தீனியர்கள், 4 இஸ்ரேலியர்கள் மற்றும் 1 லெபனான் பத்திரிகையாளர்கள் அடங்குவர். இது தவிர, பத்திரிகையாளர்களில் 8 பேர் காயமடைந்து உள்ளனர். 9 பேர் காணாமலோ அல்லது சிறைபிடிக்கப்பட்டோ உள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா (358), கிரேட் பிரிட்டன் (281), பிரான்ஸ் (221) மற்றும் ஜெர்மனி (102) ஆகிய நாடுகள் அதிக எண்ணிக்கையிலான பத்திரிகையாளர்களை இதுவரை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளன. ருமேனியா, அர்ஜென்டினா, நேபாளம் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் இஸ்ரேல் போர் தொடர்பான செய்திகளை சேகரிக்க பத்திரிகையாளர்களை அனுப்பியிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு இஸ்ரேல் தாக்குதலில் குடும்பத்தை இழந்த அல்ஜசீரா ஊடகத்தின் காசா பிரிவு செய்தியாளர் வல் அல் ததோ (Wael al-Dahcouh) தனது குடும்பத்தினரின் இறுதிச் சடங்கை முடித்துவிட்டு, அடுத்த நாளே தன்னுடைய பணிக்கு திரும்பியது பலரை நெகிழ வைத்தது