தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் பலி..! ராகுல் கண்டனம்..!

06:38 PM Jul 28, 2024 IST | admin
Advertisement

ம் நாட்டின் தலைநகர் டெல்லியில் சனிக்கிழமை கனமழை பொழிந்தது. இந்நிலையில், அங்குள்ள பிரபல தனியார் யுபிஎஸ்சி பயிற்சி மையத்தின் தரைக்கு கீழ்த்தளத்தில் (பேஸ்மெண்ட்) வெள்ளம் ஏற்பட்டது. இதில் சிக்கி மாணவிகள் இருவர் மற்றும் ஒரு  உயிரிழந்தனர். ஒருவர் மாயமானார்.   உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். “டெல்லியில் உள்ள கட்டிடத்தின் அடித்தளத்தில் தண்ணீர் தேங்கியதால் போட்டி மாணவர்கள் உயிரிழந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது” என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

டெல்லியில் மேற்குப் பகுதியில் உள்ள ஓல்ட் இந்திரா நகரில் ரவு ஸ்டடி சர்க்கிள் (Rau’s IAS Study Circle) என்ற ஐஏஎஸ் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. மேலும், டெல்லியில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் நீர்த் தேங்கி உள்ளது. இதன் விளைவாக நேற்று இரவு 7 மணியளவில் அந்த மையத்தில் சுமார் 30 மாணவர்கள் படித்துக் கொண்டிருந்த போது தரைத்தளத்திற்குள் மழை வெள்ளம் புகுந்தது.அதன் பிறகு இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து அங்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். அங்கு தண்ணீரில் தத்தளித்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அந்த மையத்தில் படித்து கொண்டிருந்த 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் என 3 பேர் துரதிஷ்டவசமாக உயிரிழந்தனர்.

Advertisement

இதை கண்டித்து நேற்று நள்ளிரவு முதல் பயிற்சி மைய கட்டிடத்திற்கு முன்னால் அங்கு படித்து வரும் மாணவர்கள் ஒன்றாக சேர்ந்த டெல்லி மாநகராட்சியைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள பாதாளச் சாக்கடை அடைப்பை அப்புறப்படுத்தாது தான் என்று கட்டடத்துக்குள் வெள்ளம் வந்ததற்கான காரணம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தலைவரும், நாடுளுமன்ற எம்பியான ராகுல் காந்தி இன்று அவரது எக்ஸ் தளத்தில் இந்த சம்பவத்தை கண்டித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “டெல்லியில் உள்ள கட்டிடத்தின் அடித்தளத்தில் தண்ணீர் தேங்கியதால் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் உயிரிழந்தது மிகவும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இதே போல சில நாட்களுக்கு முன், மழையின் போது மின்சாரம் தாக்கி ஒரு மாணவர் இறந்தார். இந்த கட்டிடத்தில் உள்கட்டமைப்பின் இந்த சரிவு அமைப்பின் ஒருங்கிணைந்த தோல்வியாகும். பாதுகாப்பற்ற கட்டுமானம், மோசமான நகரத் திட்டமிடல் மற்றும் நிறுவனங்களின் பொறுப்பற்ற தன்மை போன்றவற்றால் சாதாரண குடிமக்கள் தங்கள் உயிரை இழப்பதன் மூலம் அதற்கு விலை கொடுத்து வருகின்றனர். பாதுகாப்பான மற்றும் வசதியான வாழ்க்கை என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமையாகும் மேலும் அது அரசாங்கத்தின் பொறுப்பும் ஆகும்” என்று ராகுல் காந்தி பதிவிட்டிருந்தார்.

Tags :
3 students deathcondemneddelhiIAS training centerrahulrainடெல்லிமழை
Advertisement
Next Article