For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

2050-க்குள் புதிதாக 3.5 கோடி பேர் (77%) புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள்- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

06:51 PM Feb 03, 2024 IST | admin
2050 க்குள் புதிதாக 3 5 கோடி பேர்  77   புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள்  உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
Advertisement

வீனமயமாகி வரும் இந்த நூற்றாண்டில் மருத்துவ உலகமும் மனித இனமும் எதிர்கொண்டுவரும் மிகப் பெரிய சவால். ஆரம்பத்திலேயே கண்டறிந்து, முறையான மருத்துவச் சிகிச்சைகள் மேற்கொண்டால் குணப்படுத்திவிடலாம் எனும்போதும், தேவையான அளவு விழிப்புணர்வு இல்லாததால், உலகெங்கும் ஒவ்வொரு நாளும் பல உயிர்களைப் புற்றுநோய்க்கு இழந்துவருகிறோம்.புற்றுநோயைக் கட்டுப்படுத்த அடிப்படைத் தேவையான `சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வை' அதிகப்படுத்த, ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 4-ம் தேதி சர்வதேசப் புற்றுநோய் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.. ஆனால் 2050-ஆம் ஆண்டுக்குள் உலகளவில் புதிதாக 3.5 கோடி பேர் (77%) புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் (IARC) எச்சரித்துள்ளது.

Advertisement

சமீபகாலமாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தொடர்பாகவே சமீபமாக உலகளவில் பல்வேறு செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக, ஸ்காட்லாந்து அரசு ‘ஹ்யூமன் பாப்பிலோமா வைரஸ் நோய்த்தடுப்புத் திட்டம்’ என்ற திட்டத்தை 2008- ல் அறிமுகப்படுத்தியது. அதன்படி 12 வயதுக்குட்பட்ட அனைத்துப் பெண் குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.இந்தத் திட்டம் தொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், 'கர்பப்பைவாய் புற்றுநோயை ஏற்படுத்தும் நோய்க்கிருமியின் வளர்ச்சியைத் தடுப்பதில் HPV தடுப்பூசி 100% செயல்பட்டுள்ளது,” என்று தெரிவித்துள்ளனர். தொடந்து மத்திய அரசும் தாக்கல் செய்த 2024-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில், 9 முதல் 14 வயது பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பைவாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

மேலும் புற்றுநோய் குறித்து உலக சுகாதார அமைப்பின் IARC நிறுவனம் 115 நாடுகளில் ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளது. புகையிலை, மதுப் பழக்கம், உடல் பருமன், காற்று மாசு, சுற்றுச்சூழல் ஆகியவை புற்றுநோய் வருவதற்கான முக்கிய காரணங்களாக உள்ளன. உலக நாடுகளில் கடந்த 2022ஆம் ஆண்டில் 10 வகையான புற்று நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நுரையீரல் புற்றுநோயானது உலகளவில் பொதுவாக ஏற்படும் புற்றுநோயாகும்.

Advertisement

கடந்த 2022ஆம் ஆண்டில் 2.5 கோடி பேர் (12.4%) நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2ஆவது இடத்தில் இருக்கும் மார்பக புற்றுநோயால் 2.3 கோடி பேர் (11.6%) பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல, பெருங்குடல் புற்றுநோய்க்கு 9.6% பேரும், வயிற்றுப் புற்றுநோய்க்கு 4.9% பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், அதிகபட்சமாக 1.8 கோடி பேர் (18.7%) நுரையீரல் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர். மேலும், மார்பக புற்றுநோயால் 6.9% பேரும், வயிற்றுப் புற்றுநோயால் 6.8% பேரும், பெருங்குடல் புற்றுநோயால் 9.3% பேரும் உயிரிழந்துள்ளனர்.

2022ஆம் ஆண்டின் பாதிப்புடன் ஒப்பிடுகையில் 2050ஆம் ஆண்டிற்குள் உலக நாடுகளில் 3.5 கோடி பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள். அதாவது, ஐந்து பேரில் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள். மனிதவள மேம்பாட்டுத் தொடர்பான தரவரிசையில் வளர்ந்த நாடுகளில் 142 சதவீதமும், நடுத்தர நாடுகளில் 99 சதவீதமும் பாதிப்பு ஏற்படும். 2022 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட வழக்குகளை விட 77% அதிகமாக இருக்கும். 2050ஆம் ஆண்டிற்குள் புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இருமடங்காக இருக்கும். புகையிலை, மதுப் பழக்கம், உடல் பருமன், காற்று மாசு, சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement