For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பிரிட்டன் பொதுத்தேர்தலில் இந்திய வம்சாவளியினர் 28 பேர் வெற்றி!

05:18 PM Jul 06, 2024 IST | admin
பிரிட்டன் பொதுத்தேர்தலில் இந்திய வம்சாவளியினர் 28 பேர் வெற்றி
Advertisement

பிரிட்டனில் நடந்த பொதுத்தேர்தலில், ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியை சந்தித்தது. கியர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 107 இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் போட்டியிட்டு 28 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதற்கு முன்னர் அதிக அளவாக 15 இந்திய வம்சாவளியினர் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

28 உறுப்பினர்கள் யார்?

வெற்றி பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில், கன்சர்வேட்டிவ் கட்சியைவிட தொழிலாளர் கட்சி சார்பில் களமிறங்கி அதிகம் பேர் தேர்வாகி உள்ளனர். தொழிலாளர் கட்சி சார்பில் கன்ஷிகா நாராயண்(வேல்ஸ்), சீமா மல்ஹோத்ரா (ஹெஸ்டன்), வலேரா வாஸ்( வல்சல் மற்றும் புளோக்ஸ்விச்), நாடியா விடோமே (நோட்டிங்காம் கிழக்கு), பிரீத் கவுர் கில் ( பிர்மிங்ஹம் எட்ஜ்பஸ்டன்), தன்மன்ஜீத் சிங் தேசி ( ஸ்லவுக்), சோஜன் ஜோசப் (ஆஷ்போர்ட்), லிசா நாண்டி (விகன்), நவேந்து மிஸ்ரா (ஸ்டாக்போர்ட்), சத்வீர் கவுர் (சவுத்தாம்ப்டன்) ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.

மேலும், ஜாஸ் அத்வால், பேகி சங்கர், ஹா்பிரீத் உப்பல், வாரிண்டர் ஜஸ், குரீந்தர் ஜோசன், கனிஷ்கா நாராயண், சோனியா குமார், சுரீனா பிரேகன்பிரிட்ஜ், கிரித் என்டிவைசில், ஜீவன் சந்தர், சோஜன் ஜோசப், உள்ளிட்டோர் தொழிலாளர் கட்சி சார்பில் முதல் முறையாக தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில்ரிஷி சுனக் (ரிச்மண்ட்), பிரித்தீ படேல் ( வித்தம்,) ஷிவானி ராஜா (லீசெஸ்டர் கிழக்கு), சுவெல்லா பிராவெர்மன்( பரேஹம்), ககன் மொகிந்திரா( தென் மேற்கு ஹெர்ட்போர்ட்ஷைர்), கிளைரே கவுடின்ஹோ(கிழக்கு சர்ரே) ஆகியோரும் பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு தேர்வாகி உள்ளனர்.

அதேபோல, லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சி சார்பில் முனிரா வில்சன் டிவிக்கன் ஹாம் தொகுதியில் இருந்து தேர்வாகி உள்ளார். மொத்தத்தில் 28 இந்திய வம்சாவளி உறுப்பினர்கள் பிரிட்டனர் நாடாளுமன்றத்துக்கு தேர்வாகி சாதனை படைத்துள்ளனர்.

Tags :
Advertisement