தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

2500 மோசடி கடன் செயலிகள் நீக்கம்!

05:05 PM Dec 19, 2023 IST | admin
Advertisement

ப்போதெல்லாம் நம் மக்கள் ஆன்லைனில் கடன் வாங்குவது அதிகரித்துள்ளது. உடனடி கடன்,எந்த ஆதாரத்தையும் கேட்காமல் வெறும் ஆதார் மற்றும் செல்பியை மட்டும் கேட்டு பெற்றுக்கொண்டு, வேறெதும் நிபந்தனைகள் இல்லை என உடனடி கடனை நோக்கி பலர் செல்கையில், இந்தச் சூழலைப் பயன்படுத்தி அவர்களை ஏமாற்றுவதும் அதிகரித்துள்ளது. முன்னரே Cash coin, Cash world, New Credit, Gold Money, Best rupee, Rupee Handy, Sam Cash, Home Cash, Dutta Rupee, Royal Cash, Open Credit, Table Cash, Buddy Cash, Home Case, Loan Bro-M, Handy Loan, West Cash, Small Credit போன்ற 50க்கும் மேற்பட்ட லோன் ஆப்கள் மூலம் பொது மக்களுக்கு பணம் கொடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்து அவைகளை சென்னை போலீஸ் முடக்கியது நினைவிருக்கும் .இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2022 ஆம் ஆண்டு ஜூலை வரை, 2500 மோசடி கடன் செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் நீக்கியுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Advertisement

லோன் ஆப்கள் மூலம் ஏராளமான முறைகேடுகள் நடந்தது. ஆப் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்கள் மேற்கொண்ட சில நடவடிக்கையின் காரணமாக கடன் பெற்றவர்கள் தற்கொலையும் செய்துக்கொண்டனர். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் கூட பேசுபொருளானாது. இதனையடுத்து ரிசர்வ் வங்கி ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் "அங்கீகாரமற்ற கடன் செயலிகள் மூலம் கடன் பெற்று பலர் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக தகவல்கள் வருகிறது. அங்கீகாரமற்ற லோன் ஆப் மூலம் கடன் பெற வேண்டாம். அங்கீகாரமற்ற ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் கடன் வாங்குவது சட்டத்திற்கு புறம்பானது. அங்கீகாரமற்ற ஆன்லைன் கடன் செயலிகள் மீது பொதுமக்கள் புகார் அளிக்கலாம்" எனத் தெரிவித்து இருந்தது.

Advertisement

இதனிடையே மக்களவையில் உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலமாக அளித்த பதிலில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து கூறும்போது, ”மோசடி கடன் பயன்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் ஒன்றிய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. நிதிநிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சிலின் கூட்டங்களிலும் இந்த விவகாரம் தொடர்ந்து விவாதிக்கப்பட்டும், கண்காணிக்கப்பட்டும் வருகிறது.

மோசடியான கடன் செயலிகளை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ரிசர்வ் வங்கியானது மத்திய அரசுடன் சட்டப்பூர்வமான பயன்பாடுகள் குறித்த வெள்ளை பட்டியலை பகிர்ந்துள்ளது. இந்த பட்டியலை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது கடன் செயலிகளை வழங்கும் கூகுள் நிறுவனத்துடன் பகிர்ந்துள்ளது. இதன் அடிப்படையில், பிளே ஸ்டோரில் கடன் வழங்கும் செயலிகளை அமலாக்குவது தொடர்பான தனது கொள்கைளை கூகுள் புதுப்பித்துள்ளது. கூகுளின் திருத்தப்பட்ட கொள்கையின்படி, ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களால் வெளியிடப்பட்ட அல்லது அவற்றுடன் இணைந்து செயல்படும் செயலிகள் மட்டுமே பிளே ஸ்டோரில் அனுமதிக்கப்படும். 2021ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2022ம் ஆண்டு ஜூலை வரையிலான காலகட்டத்தில் சுமார் 3500 முதல் 4000 கடன் செயலிகள் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 2500 மோசடி கடன் செயலிகள் நீக்கப்பட்டுள்ளது’ என்று நிர்மலா குறிப்பிட்டுள்ளார்.

Tags :
deleted!fraudulentgoogle play storeloan apploan applicationsNirmala sitaraman
Advertisement
Next Article