நியூசிலாந்து பாராளுமன்றத்தில் இளம் உறுப்பினர் உரை- வைரல்! -வீடியோ!
ஹக்கா (haka) எனப்படும் பாரம்பரிய வெற்றி முழக்கத்துடன் பாராளுமன்றத்தில் ஓர் இளம்பென் ஆற்றிய உரை காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.
Hana Rawhiti Maipi Clarke என்ற பெயர் கொண்ட பெண் கடந்த 170 வருடங்களில் நியூசிலாந்து வரலாற்றில் பதிவான முதல் இளம் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். நியூசிலாந்தின் ஆக்லேண்ட் மற்றும் ஹெமில்டனுக்கு இடையில் உள்ள Huntly எனும் சிறிய நகரத்தை சேர்ந்த இவர், கடந்த ஆண்டு aக்டோபர் மாதத்தில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். மாவோரி பழங்குடி இனத்தை சேர்ந்த இவர் நியூசிலாந்தின் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக போராடி வருகிறார்.
இந்நிலையில், Maipi-Clarke கடந்த மாதத்தில் பாராளுமன்றத்தில் பாரம்பரிய முறையில், 'ஹாக்கா' அல்லது 'போர் முழக்கம்' ('haka' or 'war cry' ) செய்து தனது மக்களுக்கு வாக்குறுதி அளித்தார். குறிப்பாக அவர், "நாடாளுமன்றத்திற்கு வருவதற்குமுன், தனிப்பட்ட முறையில் எதையும் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று எனக்கு சில அறிவுரைகள் வழங்கப்பட்டன. சரி, இந்த அவையில் கூறப்பட்ட அனைத்தையும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளாமல் இருக்க முடியாது" என தனது உரையில் பேசியது அவையில் இருந்த அனைவரையும் ரசிக்க வைத்தது. மேலும் அந்த வாக்குறுதியில், "உங்களுக்காக இறப்பேன்... ஆனால், உங்களுக்காக வாழவும் செய்வேன்" என அவர் கூறியதாக New Zealand Herald செய்தியில் கூறப்பட்டுள்ளது.
நியூசிலாந்தை பொறுத்தவரை ஹக்கா நடனம், நியூசிலாந்து மாவோரி பழங்குடியினரின் ஆதி பழக்கங்களில் ஒன்று. போர், வெற்றி, ஒற்றுமை, இன குழுவின் பெருமை என எல்லாவற்றையும் சொல்ல அவர்கள் இதனை பயன்படுத்துகின்றனர்.
அதே சமயம் மைபி கிளார்க் தன்னை ஒரு அரசியல்வாதியாக நினைக்கவில்லை. மாறாக மவோரி மொழி, நிலம் மற்றும் பாரம்பரிய அறிவு ஆகியவற்றைப் பாதுகாக்கும் முயற்சியில் உள்ள ஒரு பாதுகாவலராகவே நினைக்கிறாராம். அடக்குமுறைகளைச் சந்தித்த இனமான மவோரிகளிடம் இருந்து வந்துள்ள இவர், மாவோரியின் குரல்களைக் கேட்க வேண்டிய நேரம் இது என்று உறுதியாக நம்புகிறார். மைபி கிளார்க் சமூக ஊடகங்களிலும் மிகவும் உற்சாகமாக இருக்கிறார். அவரை, இன்ஸ்டாகிராமில் 20,000 பேர் பின்தொடர்கிறார்கள்.
21-year-old MP's speech in New Zealand Parliament - Vira