2024 பத்ம விருதுகள்: ஜனாதிபதி வழங்கினார்!
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலை, அறிவியல், கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு பத்ம பூஷன், பத்ம விபூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் வழங்கி கௌவிக்கப்படுகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு பொது விவகாரங்கள் பிரிவில் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. கலைப் பிரிவில் பிரபல பாடகி உஷா உதுப்புக்கு பத்ம பூஷன் விருதை வழங்கி ஜனாதிபதி திரெளபதி முர்மு கௌரவித்தார். அதேபோல் விளையாட்டு பிரிவில் பிரபல டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணாவுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தார்.
ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த பெருமைமிகு விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி இந்த 2024ஆம் ஆண்டிற்கான விருதுகள் இந்தாண்டு மொத்தம் 132 பேருக்குப் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஐந்து பத்ம விபூஷன், 17 பத்ம பூஷன் மற்றும் 110 பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டனர். அவர்களில் 30 பேர் பெண்கள் ஆவர். மேலும், வெளிநாட்டினர்/ என்ஆர்ஐ எட்டு பேருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டனர். மேலும், ஒன்பது பேர் மரணத்திற்குப் பின் விருது பெற்றவர்களாக உள்ளனர். அவர்கள் சார்பில் அவர்கள் குடும்பத்தினர் விருதுகளைப் பெற்றுக் கொண்டனர். இன்று பாதிப் பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களுக்கு அடுத்த வாரம் விருதுகள் வழங்கப்படுமாம்.