தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

2024-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் பட்டியல்: தமிழகத்தில் தேர்வானவர்கள் யார் தெரியுமா?

02:05 PM Jan 26, 2024 IST | admin
Advertisement

குடியரசு தினத்தையொட்டி, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவா்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசுவழங்கி வருகிறது. அதன்படி 75வது குடியரசு தினத்தையொட்டி 2024-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் நேற்று இரவு அறிவிக்கப்பட்டன. இதில் 5 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 17 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 110 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதும் உள்பட 132 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.. இதில் தமிழகத்தை சேர்ந்த வைஜெயந்திமாலா, பத்மா சுப்ரமண்யம், விஜயகாந்த், பத்திரப்பன், ஜோஷ்னா சின்னப்பா, ஜோ டி குரூஸ், ஜி. நாச்சியார், சேசம்பட்டி டி.சிவலிங்கம் ஆகியோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்தியாவின் முதல் பெண் யானை பராமரிப்பாளர் (பாகன்), தமிழகத்தின் கோவையை சேர்ந்த வள்ளி ஒயில் கும்மி நடன கலைஞர் என பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த விருதுகள் வழங்கப்படும் என தகவல். சிரஞ்சீவி, பத்மா சுப்ரமண்யம், வெங்கய்ய நாயுடு என பெருவாரியான மக்களால் அறியப்படுபவர்களுக்கும் விருதுகள் அறிவிப்பு.

Advertisement

பத்ம விபூஷண் விருது

வைஜெயந்திமாலா - கலை, தமிழகம்
சிரஞ்சீவி - கலை, ஆந்திரா
வெங்கய்ய நாயுடு - பொது விவகாரங்கள், ஆந்திரா
பிந்தேஷ்வர் பதக் - சமூக சேவகர், பிஹார்
பத்மா சுப்ரமண்யம் - கலை, தமிழகம்

பத்ம பூஷண் விருது

ஃபாத்திமா ஃபீவி - பொது விவகாரங்கள், கேரளா
ஹோர்முஸ்ஜி - இலக்கியம் மற்றும் கல்வி, மகாராஷ்டிரா
மிதுன் சக்ரவர்த்தி - கலை, மேற்கு வங்கம்
சீதாராம் ஜிண்டல் - வர்த்தகம் மற்றும் தொழில் துறை, கர்நாடகா
யங் லியு - வர்த்தகம் மற்றும் தொழில் துறை, தைவான்
அஷ்வின் பாலசந்த் மேத்தா - மருத்துவம், மகாராஷ்டிரா
சத்யபிரதா முகர்ஜி - பொது விவகாரங்கள், மேற்கு வங்கம்
ராம் நாயக் - பொது விவகாரங்கள், மகாராஷ்டிரா
தேஜஸ் மதுசூதன் படேல் - மருத்துவம், குஜராத்
ராஜகோபால் - பொது விவகாரங்கள், கேரளா
தத்தாத்ரே அம்பாதாஸ் - கலை, மகாராஷ்டிரா
டோக்டன் ரின்போச்சே - ஆன்மிகம், லடாக்
பியாரேலால் சர்மா - கலை, மகாராஷ்டிரா
சந்திரேஷ்வர் பிரசாத் தாக்கூர் - மருத்துவம், பிஹார்
உஷா உதுப் - கலை, மேற்கு வங்கம்
விஜயகாந்த் - கலை, தமிழகம்
குந்தன் வியாஸ் - இலக்கியம் மற்றும் கல்வி, மகாராஷ்டிரா (இதில் பிந்தேஷ்வர், ஃபாத்திமா, ஃபீவி, சத்யபிரதா முகர்ஜி, டோக்டன் ரின்போச்சே, விஜயகாந்த் உள்ளிட்ட ஐந்து பேருக்கு அவர்களது மறைவுக்கு பிறகு பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது)

பத்மஸ்ரீ விருது வென்றவர்கள் விவரம்..

பர்பதி பருவா - இந்தியாவின் முதல் பெண் யானை பராமரிப்பாளர் (பாகான்), அசாம்
சாமி முர்மு - பழங்குடி சுற்றுச்சூழல் ஆர்வலர், ஜார்க்கண்ட்
சங்க்தங்கிமா - சமூக சேவகர், மிசோரம்
ஜாகேஷ்வர் யாதவ் - பழங்குடியினர் நல பணியாளர், சத்தீஸ்கர்
குர்விந்தர் சிங் - சிர்சாவைச் சேர்ந்த திவ்யாங் சமூக சேவகர், ஹரியாணா
சத்தியநாராயணா - காசர்கோட்டைச் சேர்ந்த விவசாயி, கேரளா
துகு மாஜி - சிந்த்ரி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி சுற்றுச்சூழல் ஆர்வலர், மேற்கு வங்கம்
கே.செல்லம்மாள் - இயற்கை விவசாயி, அந்தமான்
ஹேம்சந்த் மஞ்சி - நாராயண்பூரைச் சேர்ந்த மருத்துவப் பயிற்சியாளர், சத்தீஸ்கர்
யானுங் ஜமோ லெகோ - மூலிகை மருத்துவ நிபுணர், அருணாச்சல பிரதேசதம்
சோமண்ணா - பழங்குடியினர் நலப் பணியாளர், மைசூரு - கர்நாடகா
சர்பேஸ்வர் பாசுமதி - பழங்குடி இனத்தை சேர்ந்த விவசாயி, அசாம்
பிரேமா தன்ராஜ் - பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் சமூக சேவகர், கர்நாடகா
உதய் விஸ்வநாத் தேஷ்பாண்டே - சர்வதேச மல்லர் கம்ப பயிற்சியாளர், மகாராஷ்டிரா
யாஸ்டி மனேக்ஷா இத்தாலியா - நுண்ணுயிரியல் நிபுணர், குஜராத்
சாந்தி தேவி பாஸ்வான் மற்றும் சிவன் பாஸ்வான் - தம்பதியர்களான இவர்கள் இருவரும் கோட்னா ஓவியர்கள், பிஹார்
ரத்தன் கஹர் - பாது நாட்டுப்புற பாடகர், மேற்கு வங்கம்
அசோக் குமார் பிஸ்வாஸ் - ஓவியர், பிஹார்
பாலகிருஷ்ணன் சதானம் புதிய வீட்டில் - கதகளி நடனக் கலைஞர், கேரளா
உமா மகேஸ்வரி - பெண் ஹரிகதா விவரணை செய்பவர், ஆந்திரா
கோபிநாத் ஸ்வைன் - கிருஷ்ண லீலா பாடகர், ஒடிசா
ஸ்மிருதி ரேகா சக்மா - சக்மா லோயின்லூம் சால்வை நெசவாளர், திரிபுரா
ஓம்பிரகாஷ் சர்மா - நாடக கலைஞர், மத்திய பிரதேசம்
நாராயணன் - தய்யம் நாட்டுப்புற நடனக் கலைஞர், கண்ணூர் - கேரள
பகபத் பதன் - சப்தா நிருத்யா நாட்டுப்புற நடன நிபுணர், ஒடிசா
சனாதன் ருத்ர பால் - சிற்பி, மேற்கு வங்கம்
பத்திரப்பன் - வள்ளி ஒயில் கும்மி நாட்டுப்புற நடன கலைஞர், கோவை - தமிழகம்
ஜோர்டான் லெப்சா - லெப்சா பழங்குடியினத்தைச் சேர்ந்த மூங்கில் கைவினை கலைஞர், சிக்கிம்
மச்சிஹான் சாசா - லாங்பி குயவர், உக்ருல் - மணிப்பூர்
காடம் சம்மையா - சிந்து யக்ஷகானம் நாடக கலைஞர், தெலங்கானா
ஜான்கிலால் - பெஹ்ருபியா கலைஞர், பில்வாரா - ராஜஸ்தான்
தாசரி கொண்டப்பா - 3-ம் தலைமுறை புர்ரா வீணை வாசிப்பவர், தெலங்கானா
பாபு ராம் யாதவ் - பித்தளை மரோரி கைவினை கலைஞர், உத்தரப்பிரதேசம்
சந்திர சூத்ரதர் - 3-ம் தலைமுறை சாவ் முகமூடி தயாரிப்பாளர், மேற்கு வங்கம்
ஜோஷ்னா சின்னப்பா - விளையாட்டு, தமிழகம்
ஜோ டி குரூஸ் - இலக்கியம் மற்றும் கல்வி, தமிழகம்
ஜி. நாச்சியார் - மருத்துவம், தமிழகம்
சேசம்பட்டி டி.சிவலிங்கம் - கலை, தமிழகம் (பத்மஸ்ரீ விருது சுமார் 110 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது)

Tags :
awardsindian govtPadma BhusanPadma ShriPadma Vibhusan
Advertisement
Next Article