For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ஒரே செல்போனில் 2 WhatsApp... மெட்டாவின் அசத்தல் அப்டேட்! - முழு விபரம்!

12:35 PM Oct 21, 2023 IST | admin
ஒரே செல்போனில் 2 whatsapp    மெட்டாவின் அசத்தல் அப்டேட்    முழு விபரம்
Advertisement

ர்வதேச அளவில் அதிகப்படியான நபர்கள் பயன்படுத்தி வரும் சேட்டிங் செயலி எதுவென்றால் அது whatsapp தான். அந்த அளவுக்கு மக்கள் பயன்படுத்தும் எளிதான அம்சங்களை whatsapp வழங்குகிறது. அந்நிறுவனமும் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், வாட்ஸ் அப்பில் நீண்ட காலமாக பலரும் எதிர்பார்த்த புதிய வசதி ஒன்று விரைவில் அறிமுகம் செய்யதுள்ளது மெட்டா. இந்த புதிய அம்சம் பலருக்கு உதவியாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Advertisement

வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர். தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் ஒரே செயலியில் இரண்டு வெவ்வேறு கணக்குகளை பயனர்கள் பயன்படுத்தும் அம்சம் அறிமுகமாகி உள்ளது. ஏற்கெனவே ஒரே கணக்கை வெவ்வேறு சாதனங்களில் பயன்படுத்தும் அம்சம் வாட்ஸ்அப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதே பணி ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் இரண்டு கணக்குகளை நிர்வகித்து வரும் பயனர்களுக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் மூலம் எளிதான முறையில் பயனர்கள் தாங்கள் விரும்பும் கணக்கில் இருந்து சாட் செய்ய முடியும்.

இரண்டு கணக்குகளை வாட்ஸ்அப் செயலியில் செட் செய்வது எப்படி?

Advertisement

இந்த அம்சத்தை பயன்படுத்த பயனர்கள் இரண்டு சிம் கார்டுகள் மற்றும் ட்யூயல் சிம் கார்டு அம்சம் கொண்ட போன்களை கொண்டிருக்க வேண்டும் என தெரிகிறது. இது இருந்தால் பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் செயலியில் இரண்டாவது கணக்கை மிக எளிதான முறையில் லாக்-இன் செய்யலாம்.

வாட்ஸ்அப் செயலியில் செட்டிங்ஸ் ஓபன் செய்ய வேண்டும்

அதில் பயனரின் பெயருக்கு பக்கத்தில் உள்ள அம்புக் குறியை கிளிக் செய்ய வேண்டும்

Add Account-னை தேர்வு செய்ய வேண்டும்

தொடர்ந்து இரண்டாவது போன் எண் மற்றும் ஓடிபி எண்ணை உள்ளிட்டு வெரிஃபை செய்ய வேண்டும்

அதன் பின்னர் பயனர்கள் எளிதில் ஒரே செயலியில் இரண்டு கணக்குகளை பயன்படுத்த முடியும்

படிப்படியாக இது ரோல் அவுட் செய்யப்படும் என தெரிகிறது.

பிரைவசி, நோட்டிபிகேஷன் செட்டிங்ஸ் என அனைத்தும் இரண்டு கணக்கிற்கும் தனித்தனியாக இருக்கும்

Tags :
Advertisement