தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

புதுயுகம் தொலைக்காட்சியில் நடிகர் திலகத்தின் “கர்ணன் 60”!

03:23 PM Jul 17, 2024 IST | admin
Advertisement

மது பாரத தேசத்தின் பொக்கிஷமான நடிகர் திலகம் நடித்த கர்ணன் காவியம் 60 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு ‘கர்ணன் 60’ எனும் நடிகர் திலகத்தின் சிறப்பு நிகழ்ச்சியினை ரசிகர்கள் ஒன்று திரண்டு பங்கேற்று உள்ளனர். இந்த நிகழ்ச்சி நடிகர் திலகத்தின் நினைவு நாளான ஜூலை 21 ஞாயிறு காலை 10.00 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது.

Advertisement

சிவாஜி கணேசனின் ஆஸ்தான இயக்குநரான பி.ஆர். பந்தலு இயக்கத்தில் வெளியாகி உலகளவில் சூப்பர் ஹிட்டான படம் கர்ணன். இந்த படத்துக்கு ஏ. எஸ். நாகராஜன் திரைக்கதை எழுதியிருப்பார். மகாபாரதத்தில் வரும் கர்ணன் கதாபாத்திரத்தையும், அந்த பகுதியின் கதையின் முக்கிய அம்சங்களையும் அப்படியே திரையில் கொண்டு வந்திருப்பார்கள். மகாபாரத கதையை யாரும் எடுக்க துணிந்திராத போது, அதன் கதாபாத்தித்தை தன்னால் மட்டுமே செய்ய முடியும் என்பதை வெளிக்காட்டும் விதமாக சிவாஜி கணேசன் நடித்திருப்பார். தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரமாகவே வாழ்பவர் என்ற பெயரெடுத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கர்ணனாக திரையில் வாழ்ந்து உச் கொட்ட வைத்திருப்பார். தமிழில் வெளியான முதல் ஈஸ்ட்மேன் கலர் படமாக இருந்து வரும் கர்ணன் படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் என்.டி. ராமாராவ், கிருஷ்ணனாக நடித்திருப்பார்.

Advertisement

பானுமதி, தேவிகா, அசோகன், முத்துராமன் என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருப்பார்கள். மிக பெரிய பொருள்செலவில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட கர்ணன் திரைப்படம் தமிழ் சினிமாவின் காவியமாக இருந்து வருகிறது.கிராபிக்ஸ் காட்சிகள் போன்ற வசதிகள் இல்லாத காலகட்டத்தில், குருஷேத்திர போர் காட்சியை, பலரது கடின உழைப்பாக மிகவும் நேர்த்தியாக உருவாக்கியிருப்பார்கள்.

கண்ணதாசன் பாடல் வரிகள் எழுத விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைப்பில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. படத்தில் மொத்தம் 17 பாடல்கள் இடம்பிடித்திருக்கும். 1964இல் பொங்கல் வெயீடாக கர்ணன் ரிலீசானது. தெலுங்கு, இந்தி மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. அனைத்து மொழிகளிலும் படம் வெற்றிகரமாக ஓடி சாதனை புரிந்தது. சிறந்த படத்துக்கான தேசிய விருதையும் கர்ணன் பெற்றது.

அந்த காலத்திலேயே ரூ. 40 லட்சம் செலவில் தயாராகி, உலக அளவில் ஹிட்டானது. தமிழ் சினிமாவின் காவியமாக இருந்து வரும் கர்ணன் வெளியாகி 60 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி உருவான சிறப்பு நிகழ்ச்சியில் நடிகர் ஒய் ஜி மகேந்திரா, முனைவர் டாக்டர் மருதுமோகன், அண்ணாதுரை கண்ணதாசன், எஸ்.என். சுரேந்தர், எழுத்தாளர் ஜகாதா, கலைப்புலி சேகரன், நடிகர் சுரேஷ், தென்காசி கணேசன் பி .எச். டி, சிவாஜி ரவி, முரளி ஸ்ரீநிவாஸ், ராகவேந்திரா ஆகியோர் கர்ணன் படத்தின் பெருமைகளை பற்றியும் டிஜிட்டல் மறு வெளியீட்டில் மாபெரும் வெற்றி பெற்றதைப் பற்றியும் இடையிடையே படத்தின் காட்சி மற்றும் பாடல்கள் உடன் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலை பாடகர் முகேஷ் பாட திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் அவர்கள் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து தொகுப்பாளர் ஆர்த்தி தொகுத்து வழங்கியுள்ளார்.

Tags :
2 of 3934 Pudhuyugam TvKarnan 60programsivajiganesanyg magendran
Advertisement
Next Article