For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ஈராக்கில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் 15 ஆண்டுகள் சிறை தண்டனை- மசோதா நிறைவேற்றம்! .

07:12 PM Apr 29, 2024 IST | admin
ஈராக்கில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் 15 ஆண்டுகள் சிறை தண்டனை  மசோதா நிறைவேற்றம்
Advertisement

ம் நாட்டில் தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என்று சென்ற ஆண்டு அக்டோபர் மாதம், சுப்ரீம் கோர்ட்டில், 5 பேர் கொண்ட அமர்வில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. தன்பாலின திருமணம் செய்பவர்களுக்கு எந்த பிரச்சனைகள் வராமலும் அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாகவும், அமைச்சரவைத் தலைமையில் ஒரு குழு அமைத்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என நாடாளுமன்றத்திற்கு வலியுறுத்தப்பட்டது. அதேவேளை, ஓரினச் சேர்க்கையில் ஈடுபடக்கூடாது என்றோ அல்லது திருமணம் செய்யக்கூடாது என்றோ கூறப்படவில்லை.ஆனால், தற்போது ஈராக்கில், ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டாலே கடும் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஈராக்கில் ஓரினச்சேர்க்கையில் ஈடுப்பட்டவர்களை அறிந்தாலே, அவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்ற மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

Advertisement

முன்னதாக, அந்நாட்டில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாட்டின் அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகள் அந்தச் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வந்தன. ஆகையால், அந்தச் சட்டம் தற்காலிகமாக அமலுக்கு கொண்டவராமல் இருந்து வந்தது. இதனையடுத்துதான், அந்த தண்டனை குறைக்கப்பட்டு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement

அது மட்டுமல்லாது, விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களுக்கும், அதற்கு ஆதரவாக வாதிடுபவர்களுக்கும் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை என்றும், திருநங்கை திருநம்பிகளுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை என்றும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்கள் ஆகியோருக்கு தண்டனை போன்ற அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன. இதனால் அந்த நாட்டில் ஓரினச்சேர்க்கையில் இருப்பவர்களுக்கும், திருநங்கை, திருநம்பிகளாக இருப்பவர்களுக்கும் சவாலான சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது.

Tags :
Advertisement