தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

மேற்கு வங்கம்:சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து; 15 பேர் உயிரிழப்பு

02:18 PM Jun 17, 2024 IST | admin
Advertisement

மேற்கு வங்க மாநிலம், நியூ ஜல்பைகுரி ரயில் நிலையம் அருகே ரங்கபாணி என்ற இடத்தில் இன்று காலை 9 மணியளவில், அகர்தலாவிலிருந்து சீல்டா செல்லும் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் (13174) ரயிலின் பின் பகுதியில் சரக்கு ரயில் அதிவேகமாக மோதி விபத்து ஏற்பட்டது.

Advertisement

இதில் முதல்கட்டமாக 5 பேர் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆகவும், காயமடைந்தோர் எண்ணிக்கை 60 ஆகவும் அதிகரித்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

Advertisement

இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று கொண்டிருக்கும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக பிரதமர் உறுதியளித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

“மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அதிகாரிகளிடம் பேசி, நிலைமையை கேட்டறிந்து கொண்டேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று கொண்டிருக்கிறார்.”

மேலும் இந்த  ரயில் விபத்து தொடர்பாக உதவி எண்களை ரயில்வே துறை அறிவித்துள்ளது

033-23508794, 033-23833326 என்ற அவசர கால எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு

Sealdah Station
033-23508794
033-23833326

GHY Station
03612731621
03612731622
03612731623

KIR Station
6287801805

Katihar Station
09002041952
9771441956

LMG Station
03674263958
03674263831
03674263120
03674263126
03674263858

Tags :
15 Dead25 InjuredBengalGoods TrainHitsKanchanjunga ExpressRail Accidentswest bengalரயில் விபத்து
Advertisement
Next Article