இன்று முதல் 11 நாட்கள் உண்ணாவிரதம், சிறப்பு சடங்குகள்!- மோடி அறிவிப்பு
சில பல சர்ச்சைகளைப் பொருட்படுத்தாமல் நடக்க இருக்கும் அயோத்தி ராமர் கோயில் கும்பாவிஷேகத்திற்காக பல பக்தர்களும் தங்களுக்கு விருப்ப விரத முறைகளையும் கடைபிடிக்க தொடங்கி இருக்கின்றனர். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி தான் இந்த கோயில் விழாவில் இந்திய மக்களின் பிரதிநிதியாக கலந்து கொள்ள கடவுள் என்னைப் படைத்துள்ள நிலையில் இன்று முதல் சிறப்பு பூஜை மேற்கொள்கிறேன் என்று பெருமிதப்பட்டு ஆடியோ செய்தியை வெளியிட்டு பரவசப்பட்டுள்ளார்.
உ.பியிலுள்ள அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோஉஇல் திறப்பு விழா காண உள்ளது. பெரும்பங்கு திருப்பணிகள் நிறைவடைந்துக் கொண்டே இருக்கும் சூழலில், ஜனவரி 22 அன்று சிறப்பு பூஜைகள் உள்ளிட்ட நடைமுறைகளின் வாயிலாக ராமர் கோயில் திறப்பு விழா சிறப்பாக நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழாவுக்கு ’இந்தியா கூட்டணி’யின் பல்வேறு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் தங்கள் வருகையை மறுத்துள்ளனர். ராமர் கோயிலை அரசியல் ஆதாயத்துக்காக பாஜக பயன்படுத்துவதாக எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு தங்கள் புறக்கணிப்பை நியாயப்படுத்தி உள்ளனர்.
முன்னதாக பாஜக பிரபலமான சுப்ரமணியன் சுவாமி கூட , “ராமர் தனது மனைவி சீதையை மீட்பதற்காக ஏறக்குறைய ஒன்றரை தசாப்தங்களாகப் போரிட்டவர். மாறாக மோடி தனது மனைவியைக் கைவிட்டதற்காகப் பெயர் பெற்றவர். அயோத்தியில் ராம் மூர்த்தியின் பிரதிஷ்டை பூஜையில் மோடி கலந்துகொள்ள, ராம பக்தர்களாகிய நாம் எப்படி அனுமதிக்க முடியும்? ” என்று கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் சங்கராச்சாரியார்கள் உள்பட சில முக்கிய சந்நியாசிகளும் ஆகம விதிமுறைப்படி இக் கோயில் விழா நடக்கவில்லை என்பதால் கலந்து கொள்ள மாட்டோம் என்று அறிவித்து உள்ளனர்..
இந்நிலையில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் குறித்து பிரதமர் மோடி , ``"அயோத்தி ராமர் கோவில் கும்பாவிஷேகம், சிலை நிறுவுதல் பணிகளுக்கு இன்னும் 11 நாட்களே இருக்கின்றன. இந்த நிகழ்வை நானும் காண முடிந்தது எனது அதிஷ்டமே ஆகும். அனைத்து இந்தியர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் என்னை இறைவன் இயக்கி இருக்கிறார். இதனை கருத்தில் கொண்டு இன்று முதல் 11 நாட்கள் உண்ணாவிரதம், சிறப்பு சடங்குகள் ஆகியவற்றை கடைபிடிக்கவுள்ளேன். உங்களின் ஆசிர்வாதத்தை நான் பெறுகிறேன்.
எனது வாழ்க்கையில் முதல் முறையாக பரிபூரண உணர்வை நான் அனுபவிக்கிறேன். இந்த உணர்ச்சிப்பயணம் வெளிப்பாடு அல்ல, மனத்தால் உணரப்பட்ட விஷயம். எனது வார்த்தைகளால் மட்டுமே அதனை இயன்றளவு நான் வெளிப்படுத்துகிறேன். பல தலைமுறைகளின் கனவு நினைவாகிறது. தெய்வங்களுக்கு சடங்குகள் செய்யும் முன்பு விரதங்கள் இருக்கும் முறை சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.
சாஸ்திரங்கள் கூறும் தகவல்: நானும் எனது 11 நாட்கள் விரத சடங்கை தொடங்குகிறேன். பஞ்சவடி ஸ்ரீ ராமர் அதிக நேரம் செலவழித்த புனித பூமி ஆகும். அங்கிருந்து எனது விரதத்தை தொடங்குகிறேன். நமது சாஸ்திரப்படி யாகம், கடவுள் வழிபாடு தெய்வீக உணர்வை எழுப்பும். கும்பாவிஷேகத்தின்போது கடைபிடிக்க வேண்டிய விரத முறைகளும் இருக்கின்றன. முனிவர்கள், துறவிகள், நற்பண்புகள் கொண்டோரின் சார்பாகவும் நான் பிரார்த்திக்கிறேன். அவர்களின் வார்த்தை, மனம், செயல் எப்போதும் குறைவது இல்லை" என தெரிவித்துள்ளார்.
மேலும் இந் நிகழ்வு குறித்து ஒரு சிறப்பு வீடியோ வடிவில் ஒரு ஆடியோ செய்தியில், ``இந்து மத சாஸ்திரங்களின்படி, ஒரு தெய்வத்தின் சிலையின் பிரான் பிரதிஷ்டை (கும்பாபிஷேகம்) ஒரு விரிவான செயல்முறை. இதற்காக, பிரான் பிரதிஷ்டைக்கு பல நாட்களுக்கு முன்பே பின்பற்றப்பட வேண்டிய விரிவான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. பிரான் பிரதிஷ்டை தினத்தன்றும் அதற்கு முன்பிருந்தும் அனைத்து விதிகளையும் பரிகாரங்களையும் இன்றிலிருந்து வேதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ள அதே கண்டிப்புடன் பின்பற்றுவேன் எனவு தெரிவித்துள்ளார்