For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத 11.5 கோடி பான் கார்டுகள் முடக்கம்!

12:40 PM Nov 09, 2023 IST | admin
ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத 11 5 கோடி பான் கார்டுகள் முடக்கம்
Advertisement

ம் நாட்டில் 70.24 கோடி பான் கார்டு வைத்திருப்பவர்கள் உள்ளனர், அவர்களில் 57.25 கோடி பேர் பான் கார்டுகளை ஆதாருடன் இணைத்துள்ளனர். 12 கோடிக்கும் அதிகமான பான் கார்டுகள் ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றும், அதில் 11.5 கோடி கார்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) பதிவு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.

Advertisement

இந்தியர்களின் தனிப்பட்ட அடையாளமாக இருக்கும் ஆதார் எண்ணை குடிமக்களின் முக்கியமான ஆவணங்களுடன் இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது மத்திய அரசு. அதன்படி குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் பான் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இந்தியாவில் வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக போலி ஆதார் மற்றும் பான் கார்டு பயன்பாடு தடுக்க முடியும். அதே சமயம் பான் கார்டு மூலமாக நடைபெறும் பணம் மோசடிகள் கண்டறிய உதவும் என்று குறிப்பிட்டு இருந்தனர்.

Advertisement

நீண்ட காலமாகவே இதை செய்வதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டு வந்த நிலையில் கடைசியாக 30 ஜூன் 2023 க்கு முன் தங்கள் பான் எண்ணை, ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும் என வருமானத்துறை அறிவுறுத்தியது. ஜூலை 1 - 2023 முதல், இணைக்கப்படாத பான் எண் செயலிழக்கும் என உறுதியாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆதாருடன் இணைக்காத 11.5 கோடி பான் கார்டுகள் முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் ஆதாருடன் இணைக்காத பான் கார்டுகளை முடக்கி மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் அளித்துள்ள மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம், ஆதாருடன் பான் கார்டுகளை இணைக்க கால அவகாசம் அளிக்கப்பட்டதாக கூறியுள்ளது. பான்-ஆதார் இணைப்புக்கான கெடு 2023, ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 57.25 கோடி பேரின் பான் கார்டுகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும், காலக்கெடுவை பல முறை நீட்டித்தும், பான் கார்டுகளை ஆதாருடன் இணைக்காத 11.50 கோடி பான் கார்டுகள் முடக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இதனால் இந்த பான் கார்டுகளை நிரந்தரமாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Tags :
Advertisement