தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!

12:28 PM May 10, 2024 IST | admin
Advertisement

டப்பு ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு, தமிழகம் முழுவதும் 4,107 மையங்களில் கடந்த மார்ச் 26 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடந்தது. இத்தேர்வை எழுத 9 லட்சத்து 10,175 பள்ளி மாணவர்கள், 16,488 தனித் தேர்வர்கள் என மொத்தம் 9.26 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். அதில் 9.08 லட்சம் பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர்.இதைத் தொடர்ந்து, மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி, 88 முகாம்களில் ஏப்ரல் 12-ல் தொடங்கி 22-ம் தேதி வரை நடந்தது. பின்னர், இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிகளும் முடிக்கப்பட்டன.இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 10) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன.

Advertisement

அந்த வகையில் 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 91.55% ஆகும். மாணவர்களை காட்டிலும் 5.95 சதவீதம் அதிக அளவில் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2023ம் ஆண்டு பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய மாணவர்களில் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். தற்போது தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.

Advertisement

பாடவாரியாக தமிழில் 8, ஆங்கிலத்தில் 415, கணிதத்தில் 20691 பேர், அறிவியலில் 5,104, சமூக அறிவியலில் 4.,428 பேர் நூற்றுக்கு நூறு முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரை அரியலூர் 97.31% உடன் முதலிடத்தில் உள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருச்சி மாவட்டங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்து டாப் 5 பட்டியலில் இடம்பெறுள்ளன.

பள்ளிகள் வகைப்பாடு வாரியாக தேர்ச்சி விகிதம்: 10 ஆம் பொதுத் தேர்வில் 87.90% அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

தேர்வு முடிவுகளை அறிவது எப்படி?

www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in மற்றும் results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். பள்ளிமாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும் தேர்வு முடிவுகளை அறியலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் (என்ஐசி) மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

Tags :
10thboard examresult
Advertisement
Next Article