For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

01:39 PM Nov 16, 2023 IST | admin
10  11  12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
Advertisement

மிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொதுத்தேர்வுகள் குறித்த அட்டவணையை இன்று காலை வெளியிட்டார் அதன்படி பத்தாம் வகுப்பு தேர்வுகள் 2024-ம் ஆண்டு மார்ச் 26-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 8-ம் தேதி முடிவடைகிறது. பதினோராம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 4-ம் தேதி தொடங்கி மார்ச் 25- ம் வரை நடைபெறுகிறது. பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 1-ம் தேதியே தொடங்கி மார்ச் 22- ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும், வேறு எந்த விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டாம். நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்வாக வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். அதன்படி

Advertisement

10-ஆம் வகுப்பு:

அடுத்த ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி முதல் 29ம் தேதி வரை 10ம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் நடைபெறும். 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26ம் தேதி முதல் தொடங்கி, ஏப்ரல் 8-ஆம் தேதி நிறைவு பெறுகிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 10ம் தேதி வெளியிடப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26ல் தமிழ், மார்ச் 28ல் ஆங்கிலம் பாடத்தேர்வுகள் நடைபெறுகின்றன. ஏப்ரல் 1ல் கணிதம், ஏப்ரல் 4ல் அறிவியல், ஏப்ரல் 8ல் சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறுகிறது.

11-ஆம் வகுப்பு:

11-ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 19ல் தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறும். 11-ஆம் வகுப்புக்கு மார்ச் 4ல் தொடங்கி 25ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும். 11-ஆம் வகுப்பு தேர்வு முடிவு மே 14ல் வெளியிடப்படும்.

12-ஆம் வகுப்பு:

12-ஆம் வகுப்புக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் 17ம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும். மார்ச் 1ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி, 22ம் தேதி வரை நடைபெறுகிறது. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 6ம் தேதி வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1ல் தமிழ் பாடம், மார்ச் 5ல் ஆங்கிலம் பாடம், மார்ச் 8ல் கணினி அறிவியல், உயிரி வேதியியல், புள்ளியில் மற்றும் கணினி பயன்பாடுகள் ஆகிய தேர்வுகள் நடைபெறுகின்றன. மார்ச் 11ல் வேதியியல், கணக்குப்பதிவியியல், புவியியல் தேர்வு நடைபெறுகின்றன.

மார்ச் 15ல் இயற்பியியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம் தேர்வுகளும், மார்ச் 19ல் கணிதம், விலங்கியல், வணிகம், நுண் உயிரியல் உள்ளிட்ட தேர்வுகளும் நடைபெறுகின்றன. மேலும், மார்ச் 22ல் உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. பொதுத்தேர்வு நேரம் காலை 10 மணி முதல் 1.15 வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement