ஈரானில் இரட்டை குண்டுகள் வெடித்து 103 பேர் உயிரிழப்பு!
நேற்று 3 ஜனவரி 2020-ம் ஆண்டு அன்று ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ட்ரோன் தாக்குதலில் இராணுவ ஜெனரல் சுலைமானி கொல்லப்பட்டார். ஜெனரல் காசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்ட நான்காவது ஆண்டு நினைவு நாளில் தெற்கு நகரமான கெர்மனில் உள்ள சாஹேப் அல்-ஜமான் மசூதிக்கு அருகே சுலைமானிக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். அப்போது யாரும் எதிர்பார்த்த நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு குண்டுவெடிப்புகள் வெடித்தன. இந்த குண்டு வெடித்ததில் மக்கள் அலறியடித்து ஓடினர். இருப்பினும் கல்லறைக்கு அருகில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தில் 103க்கும்- மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 170 பேர் காயம் காயமடைந்தனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
. வடகிழக்கு நாடுகள் முழுவதும் சிறப்பாக செயலாற்ற ராணுவத்துக்கு இணையாக, ஈரானின் சக்திவாய்ந்த குவாட் படை இருந்தது. இந்த படையை உருவாக்கி, அதற்கு தளபதியாக இருந்த சுலைமானியை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா திட்டமிட்டு கொலை செய்தது.அமெரிக்கா சுலைமானியை கொலை செய்தாலும், சுலைமானி இன்னும் உயிருடன் வாழ்கிறார் என்று ஈரான் தலைவர் அயோத்தல்லா அலி காமேனி தெரிவி்த்துள்ளார். ஈரான் மக்கள் சுலைமானியை ஹீரோ போன்று சித்தரித்து கொண்டாடுகிறார்கள் அந்த வகையில் ஈரானின் படைத் தளபதி சுலைமானி கொல்லப்பட்ட நாளான இன்று மக்கள் அஞ்சலி செலுத்த குழுமியிருந்தபோது இந்த வெடிகுண்டு வெடித்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெடிகுண்டு வெடிப்பு தீவிரவாதத் தாக்குதல் என்று ஈரானில் ஒளிபரப்பாகும் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியி்ட்டுள்ளது.
“இது ஒரு பயங்கரவாத தாக்குதல்” என்று கெர்மனின் துணை ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். அயதுல்லா அலி கமேனிக்குப் பிறகு ஈரானின் சக்திவாய்ந்த முக்கிய நபராக சுலைமானி இருந்தார். ஈரானின் புரட்சிகர படையின் தளபதியாக இருந்த அவர், ஈரானியக் கொள்கைகளை பிராந்தியம் முழுவதும் செயல்படுத்துவதில் முக்கிய பங்குவகித்தார். ஹமாஸ், ஹிஸ்புல்லா உள்ளிட்ட ஆயுதக் குழுக்களுக்கு தளவாட உதவிகள் வழங்குவதற்கும் அவர் பொறுப்பு வகித்தார்.
ஈரான் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் “ கெர்மான் நகரில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் இதுவரை 103 பேர் கொல்லப்பட்டனர், 141 பேர் படுகாயமடைந்தனர். இதில் ஏராளமானோர் உயிருக்குஆபத்தான நிலையில் உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளது.
ஈரானின் டஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் “ சிலர் வெடிகுண்டு வெடித்த இடத்துக்கு இரு பைகளில் மர்ம பொருட்களுடன் வந்தனர். வெடிகுண்டுகளை கூட்டத்துக்குள் வைத்துவிட்டு, ரிமோட் மூலம் வெடிக்கச் செய்திருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளது.
வெடிகுண்டு வெடித்தபோது அங்கிருந்தவர்கள் கூறுகையில் “ நாங்கள் சுலைமானி கல்லறையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது, எங்களுக்கு பின்னால் வந்த கார் திடீரென நிறுத்தப்பட்டு, அதிலிருந்து குப்பைக் கூடைகள் தூக்க வீசப்பட்டன அப்போது வெடிகுண்டுகள் வெடித்தன. வெடிகுண்டு வெடித்த சத்தம் மட்டும்கேட்டது,நாங்கள் தரையில் படுத்துவிட்டோம்” என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.வெடிகுண்டு வெடித்த இடத்தில் சிதறிக் கிடக்கும் உடல்களை எடுக்கவும், காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் ஆம்புலன்ஸ்கள் வந்தவாறு இருந்தன