அமெரிக்காவில் சட்டவிரோத நுழைந்த ஒரு லட்சம் இந்தியர்கள் கைது!
இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலும் ஏராளமான சீக்கியர்கள் இங்கிலாந்துக்கும், அமெரிக்காவுக்கும் சென்று அங்கேயே தங்கி விட்டனர். அங்கு வெற்றிகரமாக வரத்தகம் செய்யும் இவர்கள் பெரும் பணக்காரர்களாகவும் உள்ளனர் இதன் தொடர்ச்சியாகவே பஞ்சாபில் இருந்து ஏராளமானோர் அமெரிக்காவிற்கு செல்கின்றனர். படித்தவர்கள், மென்பொருள் பொறியாளர்கள் போன்றவர்களுக்கு அமெரிக்கா செல்ல எளிதில் விசா கிடைத்து விடுகிறது.ஆனால் ஹோட்டல் போன்ற வணிகம் செய்யும் நோக்கத்துடன் அங்கு செல்ல விரும்பும் பஞ்சாபியர்களுக்கு விசா எளிதில் கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் சட்டவிரோதமான முறையில் அங்கு செல்ல முற்படுகின்றனர். பல நாடுகளுக்கு மாறி மாறி சென்று, அமெரிக்க விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகள் கண்ணில் மண்ணை தூவிவிட்டு உள்ளே நுழைவது எளிதான காரியம் அல்ல. ஆனாலும் இவ்வாறு சட்டவிரோதமாக செல்பவர்களை அழைத்து செல்ல பஞ்சாபில் பெரிய குழுக்கள் செயல்படுகின்றன. இவர்கள் மூலம் அமெரிக்காவிற்குள் நுழைய பல லட்சம் செலவு செய்து நுழைந்து விடுவது சகஜமான நிலையில் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு (யுசிபிபி) வெளியிட்ட தரவுகளின்படி, அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த 96,917 இந்தியர்கள் பிடிபட்டுள்ளனர். இத்தகைய ஊடுருவல்களின் போது உயிர் மற்றும் உடைமை இழப்புகள் இருந்தாலும், குறிப்பாக ஆபத்தான பாதைகள் வழியாக, சமீபத்திய ஆண்டுகளில் ஊடுருவல் விகிதங்களில் மிகப்பெரிய அதிகரிப்பு உள்ளது. இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 96,917 இந்தியர்களில் 30,010 பேர் கனடா எல்லையிலும், 41,770 பேர் மெக்சிகோ எல்லையிலும் பிடிபட்டுள்ளனர். 2019-20ல் பிடிபட்ட 19,883 இந்தியர்களுடன் ஒப்பிடுகையில் இது ஐந்து மடங்கு அதிகமாகும். சட்ட அமலாக்க முகவர் இந்த புள்ளிவிவரங்கள் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மட்டுமே என தெரிவித்துள்ளார். ஆனால் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று அவர்களின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் அதிகளவு குஜராத் மற்றும் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர் - குழந்தைகள், குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட குழந்தைகள், முழுக் குடும்பங்கள் மற்றும் துணையில்லாத பெரியவர்கள். இதில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் ஒற்றை வயது வந்தவர்கள்.
இதில், பெரும்பாலானோர் புகலிடம் தேடி அமெரிக்காவுக்கு வருவதாகவும், இதற்கு முன்பு அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்து வேலை செய்து வருவோரின் தூண்டுதலின்பேரில் அதேபோன்று நுழைந்து வேலைவாய்ப்புகளைப் பெறுவதாகவும் தெரிய வந்தது. இப்படி சட்டவிரோதமாக எல்லையை கடக்கும்போது பல விபத்துக்கள் ஏற்படுகின்றன. காந்திநகரில் வசிக்கும் பிரிஜ்குமார் யாதவ், டிசம்பர் 2022ல் டிரம்பின் சுவரைக் கடந்து அமெரிக்காவிற்குள் தனது குழந்தையை வைத்து கொண்டு நுழைய முயன்ற போது மெக்சிகன் சரிந்து விழுந்து தனது உயிரை இழந்தார். இவரது மனைவி பூஜா, அமெரிக்காவின் சான் டியாகோ எல்லையில் 30 அடி உயரத்தில் விழுந்தார். அவர்களது மூன்று வயது குழந்தை குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்தின் (ICE) காவலில் வைக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் நடந்தாலும், இந்தியர்கள் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைவது தொடர்ந்துகொண்டே இருக்கிறது.