உலக இட்லி தினத்தில் 60 விநாடிகளில் 100 வகைச் சட்னிகள்!
இட்லி உலகின் மிகவும் ஆரோக்கியமான காலை உணவு என்பதை முன்னிலைப்படுத்தும் வகையில், மார்ச் 30 உலக இட்லி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த சிறப்பு நாளில், 100 வகையான சட்னிகளுடன் இட்லியை அனுபவிக்கும் வகையில் ஒரு யூனிக் கலாச்சார கொண்டாட்டம் நடந்தது!ஆம்.. உலக இட்லி தினத்தை முன்னிட்டு சென்னை மாதவரத்தில் ரேடியன்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் பெண்கள் 100 வகையான சட்னி தயாரித்து லிங்கன் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர்.
மாதவரம் அடுக்குமாடி குடியிருப்பில் 1 நிமிடத்தில்100 வகை சட்னிகள் சாதனை நிகழ்ச்சியை,முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் H V.ஹண்டே துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஆச்சி மசாலா நிறுவனர் பத்மசிங் ஐசக் அடையார் ஆனந்த பவன் உரிமையாளர் சீனிவாச ராஜா, பெருந்தலைவர் காமராஜரின் பேத்தி க.மல்லிகா காமராஜ், பாரதியாரின் பேத்தி கவிஞர் உமா பாரதி உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
மிக்ஸி ஜாருடன் சட்னி பொருட்களுடன் வரிசையாக தயார் நிலையில் இருந்த பெண்கள் விசில் அடித்தவுடன் சூறாவளிபோல் சட்னி தயாரித்தனர். மாதவரம் ரேடியன்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் இந்தியாவில் உள்ள அனைத்து மொழியினரும் மதத்தினரும் வசித்து வரும் நிலையில் சகோதர, சகோதரி உணர்வுடன் அனைவரும் ஒன்றிணைந்து குடியிருப்பு நல சங்கம் சார்பில் இட்லி தினத்தை முன்னிட்டு சட்னி தயாரித்தனர்.60 வினாடிகளில் 100 விதமான சட்னி தயாரிக்க 100 மகளிர் குழுவினரை பத்து நாட்களுக்கு முன்பாகவே தயார் செய்து ஒரு குழுவுக்கு 10 பெண்கள் என பிரித்து வானவில் போன்று 7 நிறங்களில் புடவை அணிந்து இடம் பெற்றனர். காய்கறி சட்னி , பழ வகை சட்னி, கீரை சட்னி ,வேர்க்கடலை சட்னி, தேங்காய் சட்னி, குழந்தைகள் சட்னி, உலர்ந்த பழங்கள் சட்னி , மருத்துவ குணம் உள்ள சர்க்கரை நோய் சட்னி ,கொலஸ்ட்ரால் குறைப்பதற்கான சட்னி அது மட்டுமில்லாமல் ஃபாஸ்ட் ஃபுட் உணவிற்கு ஏற்ற சத்தான சட்னி என வகைவகையான நூற்றுக்கு மேற்பட்ட சட்னிகள் தயாரித்தனர்.
மேலும்,கோங்குரா சட்னி,முருங்கை இலை சட்னி,பொன்னாங்கண்ணி சட்னி, மேத்தி சட்னி,பச்சை மாங்காய் வேர்க்கடலை சட்னி,தயிர் வேர்க்கடலை சட்னி,ரசம் வேர்க்கடலை சட்னி,கருப்பு மிளகு வேர்க்கடலை சட்னி, தயாரித்து அசத்தினர். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஐந்து வகையான மொழிகளில் பெண்கள் பங்கேற்றனர்.இந்நிகழ்வில் ரத்த கொதிப்பு இருப்பவர்கள் சட்னி சாப்பிடக்கூடாது என்ற நிலையில் அவர்களுக்கென்று சட்னி சர்க்கரை நோயாளிகளுக்கு என்று சட்னி தயாரித்தது புதுமையாக இருந்ததாக தெரிவித்தாா்
அடிசினல் ரிப்போர்ட்
🍛 100 சட்னிகள் – ரகங்கள் & ஸ்பெஷாலிட்டி:
தெற்கு இந்தியா:
கோகோநட் சட்னி
காரா சட்னி (ஆந்திரா)
இனிப்பு தேங்காய் சட்னி (கேரளா)
மல்லிகை பூ சட்னி (தமிழ்நாடு)
வட இந்தியா:
புதினா கொத்தமல்லி சட்னி
இம்லி சட்னி
குண்டு மிருதிகா சட்னி
உலக சட்னிகள்:
ஹம்மஸ் (மிடில் ஈஸ்ட்)
சாட்சா (மெக்ஸிகோ)
பெஸ்டோ சாஸ் (இத்தாலி)
எக்ஸ்பெரிமெண்டல் சட்னிகள்:
டார்க் சாக்லேட் சட்னி
மாம்பழ சட்னி
பீர் சட்னி
📌 ஏன் 100 சட்னிகள்?
இட்லி ஒரு நியூட்ரல் டோஸ் – எந்த சுவையுடனும் பொருந்தும்!
இந்தியாவில் மட்டும் 50+ சட்னி வகைகள் உள்ளன.
உலகளாவிய சுவைகளை இணைக்கும் கலாச்சார பாலம்.
🎉 கொண்டாட்ட யோசனைகள்:
"சட்னி போட்டி" – புதிய சட்னியை கண்டுபிடி!
இட்லி-சட்னி ஃபுட் பெஸ்டிவல் (உள்ளூர் ஹோட்டல்களுடன் இணைந்து).
ஒரு நாளில் 10 வகை சட்னி சவால்!
"இட்லி ஒரு கலாச்சாரம், சட்னி ஒரு கலை!"
தனுஜா ரெங்கராஜன்