இந்தியாவுக்கு வந்த 100 லட்சம் கிலோ தங்கம்..!.
ஒரு நாட்டின் பொருளாதாரம் அதன் கையில் இருக்கும் தங்கம் மற்றும் அந்நிய செலாவணி வைத்து தன முடிவு எட்டப்படும். அப்படி இருக்கும் சூழலில் இந்தியாவின் மொத்த தங்கம் எவ்வளவு தெரியுமா? 840 . 76 மெட்ரிக் டன். இது நான் சொல்வது வெறும் அரசு கையில் இருக்கும் தங்க அளவு. இந்தியா உலகத்தின் எட்டாவது நாடாக திகழ்கிறது. இந்தியா 2022 க்கு பிறகு அதிகமாக தங்கம் வாங்கி குவிக்கிறது.
பாங்க் ஆஃப் இங்கிலாந்தின் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் தங்கத்திலிருந்து, 100 டன், அதாவது, 100 லட்சம் கிலோ தங்கம், பத்திரமாகவும் ரகசியமாகவும் சமீபத்தில் இந்தியாவின் பெட்டகங்களுக்கு வந்து சேர்ந்தது. 1991ஆம் ஆண்டுக்குப் பின், இந்த அளவு அதிக தங்கம், இப்போதுதான் இந்தியா வந்துள்ளது. மேலும் இந்தியாவின் பெட்டகத்துக்கு வந்து சேர்ந்த தங்கத்தின் அளவிலும் இது மிகவும் அதிகமாகும்.
இது ஏன் பிரிட்டனில் இருந்து வந்தது? 1991 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து இதை பிரிட்டனில் பாங்க் ஆப் இங்கிலாந்து வங்கியில் வைக்கபட்டதற்கான காரணம் வெறும் பாதுகாப்பு விஷயம் அல்ல. இந்தியா ஒரு பெரு பொருளாதாரத்தை 1987 -1990 வாக்கில் அசுர வேகத்தில் எடுக்கும் போது பல நாடுகள் இந்தியாவை நம்பவில்லை. ஏற்கனவே கூறியிருந்தது போல ஒரு நாட்டின் மதிப்பு அதனிடம் இருக்கும் தங்கம் மற்றும் அந்நிய செலாவணி தான் தீர்மானிக்கும் என்பது உண்மை. இந்த வகையில் பல நாடுகள் இந்தியாவை நம்ப தயாராய் இல்லை. அதனால் உலக நாடுகளை நம்புவதற்கும் பல பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் இந்தியா பல நாடுகளில் தங்கத்தை கொண்டு போய் வைத்து பொருளாதாரத்தை மேற்படுத்திய ஒரு நிகழ்வு தான் இந்த தங்க கதை.
அங்கு வைத்திருக்கும் செலவு மற்றும் அதனை நிர்வகிக்கும் செலவு என பல விஷயத்தை கருத்தில் கொண்டு இந்த தங்கம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. நீங்கள் கேட்கலாம் இப்போது உலக நாடுகள் நம்மை நம்புமா என்று...கண்டிப்பாக நம்பும் ஏன் எனில் இந்தியா உலகத்தின் நாலாவது எக்கனாமி மட்டும் அல்ல இந்தியாவின் 59 % சதவிகிதம் அந்நிய செலவாணியான டாலர்களை கொண்டு இருக்கிறது என்பது கூடுதல் விஷயம். அதன்படி, தனி விமானம் மற்றும் உச்சக்கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் 100 லட்சம் கிலோ தங்கம் இந்தியா வந்தடைந்தது.
தற்போது மும்பையிலுள்ள ரிசர்வ் வங்கியின் பழைய அலுவலக கட்டிடத்திலும், நாக்பூரில் உள்ள பெட்டகங்களிலும் இந்த தங்கம் பத்திரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா தொடர்ந்து தங்கம் வாங்கி குவிக்கின்ற வகையில் இந்த ஆண்டு மட்டும் 37 டன் வாங்கியிருக்கிறது. இது போன வருட 33 டன்னை விட அதிகம் மற்றும் இந்த வருட முடிவுக்குள் இன்னும் தங்கம் வாங்கும் என கணிக்கப்படுகிறது. உலகத்தின் மொத்த தங்க இருப்பில் 10 % இந்தியாவின் கஜானாவில் உள்ளது.
இந்தியாவின் மொத்த தங்கமான 840 . 76 மெட்ரிக் டன் அளவில் 408 மெட்ரிக் டன் இந்தியாவிலும் 413.79 வெளி நாட்டில் இந்தியா கட்டுப்பாட்டிலும் இருக்கிறது என்பது கூடுதல் தகவல். இந்தியா அனைத்து தங்கத்தை இந்தியாவுக்கு எடுத்து வருமா என வரும் வருடங்களில் தெரியும்.