For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

கர்நாடகாவில் கன்னடர்களுக்கே 100% வேலை - மசோதா ரெடி

03:02 PM Jul 17, 2024 IST | admin
கர்நாடகாவில் கன்னடர்களுக்கே 100  வேலை   மசோதா ரெடி
Advertisement

ர்நாடகா மாநிலத்தில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களில் உள்ள C,D கிரேடு பணிகளில் உள்ள வேலைவாய்ப்புகள் கர்நாடகாவை சேர்த்தவர்களுக்கே கிடைக்க வேண்டும் எனும் வகையில் புதிய மசோதாவை அம்மாநில அரசு கொண்டுவந்துள்ளது.மசோதாவில் உள்ள விதிகளைப் பின்பற்றாத நிறுவனங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும், மேலும் உள்ளூர் ஆட்களை வேளைக்கு அமர்த்தாத நிறுவனங்களுக்கு மசோதாவின் படி ஒவ்வொரு நாளும் 100 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. விரைவில் சட்டபேரவையில் இந்த மசோதாவை தாக்கல் செய்து சட்டமாக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதேநேரம், இந்த சட்டத்திற்கு மாநில ஆளுநரிடம் இருந்து ஒப்புதல் கிடைக்குமா என்ற கேள்விகளும் எழுகின்றன. இதற்கு முன்னரும் குஜராத், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இது போன்ற மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட போதிலும் நீதிமன்றங்கள் மூலம் அவை ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இந்த மசோதா குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிடுகையில், கர்நாடகாவில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகப்படுத்தவும், வேலையின்மையை குறைக்கும் நோக்கிலும் புதிய மசோதாவுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார். அதன்படி, கர்நாடகா மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் உள்ள சி,டி கிரேடு பணிகளில் 100 சதவீத கன்னடர்களை கட்டாயமாக பணி அமர்த்துவது தொடர்பான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்றும், கன்னட தேசத்தில் (கர்நாடகாவில்) இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதை குறைத்து கன்னடர்களின் நலனைக் காப்பதே எங்கள் அரசின் முன்னுரிமை என அம்மாநில முதல்வர் சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

சி கிரேடு வேலை என்பது கிளார்க், அலுவலக உதவியாளர், தட்டச்சாளர், டெலிபோன் ஆப்பரேட்டர், சூப்பர்வைசர், மெக்கானிக், எலக்ட்ரீசியன் போன்ற பணிகள் ஆகும்.

அதே போல டி கிரேடு வேலை என்பது சமையல் பணியாளர், காவல் பணியாளர் (வாட்ச்மேன்), தோட்ட பணியாளர், தூய்மை பணியாளர் போன்ற உடல் உழைப்புகொண்ட வேலைகள் ஆகும்.

இந்நிலையில் இந்த மசோதாவுக்கு தொழிலதிபர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பயோகான் நிர்வாகத் தலைவர் கிரண் மஸும்தார் ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘’உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற அரசின் முனைப்பு, தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் கர்நாடகாவின் திறனை பாதித்துவிடக் கூடாது. இந்த மசோதாவில் அதிகத் திறமை கோரும் பணிகளுக்கான ஆட்சேர்ப்புக்கு விலக்கு அளிக்கும் முறை இருக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்

Tags :
Advertisement